புதுமுகங்களுடன் இணைந்த சோனியா அகர்வால் | பிளாஷ்பேக் : இசை அமைப்பாளர் மலேசியா வாசுதேவன் | பிளாஷ்பேக் : ஒரே படத்தில் 5 பாடல்களுக்கு நடனமாடிய லலிதா, பத்மினி | அமலாக்கத்துறை முன் விஜய் தேவரகொண்டா ஆஜர் | பிரமானந்தம் - யோகிபாபு சந்திப்பு ஏன்? | ஆந்திரா மதுபான ஊழல் ; விசாரணை வளையத்தில் நடிகை தமன்னா : கோலிவுட் போல் டோலிவுட்டும் கலக்கம் | 3 மணி நேரம் ஓடப் போகும் 'வார் 2' | வாழ்க்கை என்பது ஒரு வட்டம் ; ராஷி கண்ணாவின் புதிய மகிழ்ச்சி | ஸ்வேதா மேனன் மீது எப்ஐஆர் பதிவு ; நடிகர் சங்கத் தேர்தலில் போட்டியிட விடாமல் தடுக்கும் முயற்சியா? | நீங்க எனக்கு இன்ஸ்பிரேசன் : சிம்ரனை பாராட்டிய திரிஷா |
நெல்சன் இயக்கத்தில் விஜய் பூஜா ஹெக்டே நடித்திருக்கும் பீஸ்ட் படம் தமிழ் புத்தாண்டுக்கு திரைக்கு வருகிறது. இந்நிலையில் அனிருத் இசையில் இப்படத்தில் இடம் பெற்றுள்ள அரபிக் குத்து பாடல் சமீபத்தில் வெளியிடப்பட்டு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்று வருகிறது. இந்த நிலையில் தற்போது அரபிக் குத்து பாடல் குறித்து ஒரு அதிர்ச்சி தகவல் வெளியாகி இருக்கிறது.
அது என்னவென்றால், இதற்கு முன்பு சிவகார்த்திகேயன் நடிப்பில் நெல்சன் இயக்கிய டாக்டர் படத்தில் செல்லம்மா என்ற பாடல் படம் முடியும்போது டைட்டிலில் தான் இடம்பெற்றது. அதுபோலவே அரபிக் குத்து பாடலும் பீஸ்ட் படத்தில் இடம் பெற்று இருப்பதாக ஒரு தகவல் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இதை பார்த்த விஜய் ரசிகர்கள் மிகப்பெரிய அளவில் அதிர்ச்சி அடைந்திருக்கிறார்கள். அதையடுத்தது அரபிக்குத்து பாடலை கண்டிப்பாக படத்திற்குள் இடம்பெறச் செய்ய வேண்டும். அதுதான் எங்களுக்கு உற்சாகத்தை கொடுக்கும். கண்டிப்பாக படம் முடிந்த பிறகு பாடலை படத்தின் டைட்டிலோடு இடம்பெறச் செய்யக்கூடாது என்று தங்களது கருத்துக்களை சோசியல் மீடியாவில் வெளியிட்டு வருகிறார்கள்.