சிவகார்த்திகேயனுக்கு கண்டனம் தெரிவித்த சிவாஜி சமூக நலப்பேரவை | பொங்கல் போட்டியில் முக்கிய கதாநாயகிகள் | முன்பதிவில் ஜனநாயகன் செய்த சாதனை | 300வது படத்தை எட்டிய யோகி பாபு | மீண்டும் ரசிகர்களை ஏமாற்றிய கருப்பு | 75 கோடி வசூலை கடந்த சர்வம் மாயா | ஜனநாயகன் ரீமேக் படமா ? பகவத் கேசரி இயக்குனர் பதில் | ரிஷப் ஷெட்டி படத்தில் இருந்து விலகி விட்டேனா ? ஹனுமன் நடிகர் மறுப்பு | பிரபாஸிற்கு வில்லனாக நடிக்கும் ஈரானிய நடிகர் | சைரா நரசிம்ம ரெட்டி பட இயக்குனருடன் கைகோர்க்கும் பவன் கல்யாண் |

யோகி பாபு தெலுங்கு திரைப்படத் துறையில் அறிமுகமாகிறார். அந்த தெலுங்கு படத்தின் தலைப்பு 'குர்ரம் பாப்பி ரெட்டி'. முரளி மனோகர்ரெட்டி இயக்கும் இந்தப் படத்தில், பத்மஸ்ரீ விருதுபெற்ற பிரபல தெலுங்கு காமெடியன் பிரம்மானந்தம் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். படப்பிடிப்பு நேரத்தில், பிரம்மானந்தம் மற்றும் யோகி பாபுவுக்கு இடையே நல்ல நட்பு உருவாகி உள்ளது. அந்தவகையில், பிரம்மானந்தம் ஐதராபாத்தில் உள்ள தன் வீட்டுக்கு யோகி பாபுவை அழைத்து, நேரம் செலவழித்துள்ளார், இருவரும் மனம் திறந்து பேசினர்.
அப்போது, தனது வாழ்க்கை அனுபவங்களைப் பதிவு செய்துள்ள அவர், "நான் பிரம்மானந்தம்" என்ற புத்தகத்தை நினைவுப் பரிசாக யோகி பாபுவிடம் வழங்கினார். இந்த அனுபவத்தைப் பற்றி யோகி பாபு, தெலுங்கு சினிமா என்னை இப்படிப்பட்ட அன்புடனும் ஆதரவுடனும் வரவேற்றது மிகுந்த மகிழ்ச்சியை அளிப்பதாகவும் பிரம்மானந்தம் சார் போல ஒரு லெஜண்டுடன் இணைவது பெருமையாக உள்ளதாகவும் கூறியுள்ளார்.