ஆகஸ்ட் 1ல் 150 படங்களை கடக்கப் போகும் 2025 | 24 மணிநேரத்திற்குள் 50 லட்சம் பார்வைகளை கடந்த ‛என்ன சுகம்' பாடல் | காப்புரிமை விவகாரம் : இளையராஜா மனு தள்ளுபடி | கோவிலில் தீ மிதித்த புகழ் | 'தலைவன் தலைவி' முதல்வார இறுதியில் 25 கோடி வசூல் | அமெரிக்காவில் முன்னதாகவே திரையிடப்படும் 'கூலி' | ஜாய் கிறிஸில்டா பதிவை இதுவரை 'ஷேர்' செய்யாத மாதம்பட்டி ரங்கராஜ் | 30 ஆயிரம் கோடி சொத்துக்களில் பங்கு கேட்கிறாரா கரிஷ்மா கபூர்? | 'கிங்டம்' படத்தில் இலங்கை கதை | சோலோ ஹீரோயினாக நடிக்கும் தன்யா ரவிச்சந்திரன் |
மலேசியாவில் பாடகராகவும், நடிகராகவும் புகழ்பெற்றவர் முகன்ராவ். விஜய் டிவி பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் இங்கும் புகழ்பெற்றார். தற்போது சினிமாவிலும் நடிக்க தொடங்கி இருக்கிறார். இவர் நடித்த வேலன் படம் கடந்த ஆண்டு இறுதியில் வெளிவந்தது. தற்போது மேலும் சில படங்களில் நடிக்க பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.
இந்த நிலையில் சரிகம நிறுவனம் தயாரித்து வெளியிட்டுள்ள இசை ஆல்பத்தில் ஆடியுள்ளார். மயக்குறியே, சிரிக்கிறியே... என தொடங்கும் என்ற பாடலை அனிருத் பாடி உள்ளார். அனிவி இசை அமைத்துள்ளார், ஜிம்மிருத் இயக்கி உள்ளார். இதில முகன்ராவுடன் ஆத்மிகா ஆடியுள்ளார்.
மீசைய முறுக்கு படத்தின் மூலம் அறிமுகமான ஆத்மிகா, அதன்பிறகு கோடியில் ஒருவன் படத்தில் நடித்தார். நடித்து முடித்துள்ள காட்டேரி படம் வெளிவரவில்லை. கண்ணை நம்பாதே, நரகாசுரன் படங்களிலும் நடித்துள்ளார். தற்போது சில படங்களில் நடித்து வரும் இந்த இசை ஆல்பத்தில் ஆடியுள்ளார்.