ராஜமவுலி - மகேஷ்பாபு படத்தின் பெயர் 'வாரணாசி'? | ரஜினி, கமல் கூட்டணி படம் : பிரதீப் ரங்கநாதன் பதில் | விஜய் ஆண்டனியின் அடுத்தபடம் பற்றிய தகவல் | நாகர்ஜூனாவின் 100வது படம் தொடங்கியது | பான் இந்தியா படம் : பிரசாந்த் ஆர்வம் | நான் அவனில்லை : இயக்குனர் பாரதி கண்ணன் விளக்கம் | 'காந்தாரா சாப்டர்1' காஸ்ட்யூம் டிசைன்: ரிஷப் ஷெட்டி மனைவி பிரகதி நெகிழ்ச்சி | 300 கோடி வசூல் படங்கள் : லாபக் கணக்கு எவ்வளவு ? | அடுத்த மல்டிபிளக்ஸ் திறக்கப் போகும் மகேஷ்பாபு | 50 கோடி வசூல் கடந்த 'இட்லி கடை' |
தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகைகளில் ஒருவர் கீர்த்தி சுரேஷ். ஆனால், தெலுங்கில் அவர் நடித்து வெளிவந்த 'மகாநடி' படத்திற்குப் பிறகு அவர் நடித்து தமிழ், தெலுங்கில் வெளிவந்த 8 படங்கள் தோல்விப் படங்களாக அமைந்தன. விஜய்யுடன் நடித்த 'சர்க்கார்' படம் மட்டுமே வெற்றிப் படமாக அமைந்தது. சமீபத்தில் தெலுங்கில் வெளிவந்த 'குட் லக் சகி' படம் கூட தோல்வியடைந்தது.
தொடர்ச்சியாக கீர்த்தி சுரேஷ் நடித்த படங்கள் தோல்வியடைந்தது குறித்து சமூக வலைத்தளங்களிலும், பல்வேறு ஊடகங்களிலும் செய்திகள் வெளிவந்தன. அவற்றிற்குப் பதில் தரும் விதமாக சில கிளாமரான புகைப்படங்களைப் பதிவிட்டு அவற்றோடு ,“எப்போதும் திரும்பிப் பார்ப்பதில்லை, கேமரா இருந்தால் மட்டுமே…” என கருத்தும் சொல்லியிருக்கிறார்.
தொடர்ந்து தோல்விப் படங்கள் என்றாலும் தற்போது தெலுங்கில் சிரஞ்சீவி மகேஷ் பாபு ஆகியோருடன் நடித்து வருகிறார் கீர்த்தி. தமிழில் முதன்மைக் கதாநாயகியாக நடித்துள்ள 'சாணி காயிதம்' விரைவில் ஓடிடியில் வெளியாக உள்ளது. மலையாளத்திலும் 'வாஷி' என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார்.