ரஜினி, கமல் கூட்டணி படம் : பிரதீப் ரங்கநாதன் பதில் | விஜய் ஆண்டனியின் அடுத்தபடம் பற்றிய தகவல் | நாகர்ஜூனாவின் 100வது படம் தொடங்கியது | பான் இந்தியா படம் : பிரசாந்த் ஆர்வம் | நான் அவனில்லை : இயக்குனர் பாரதி கண்ணன் விளக்கம் | 'காந்தாரா சாப்டர்1' காஸ்ட்யூம் டிசைன்: ரிஷப் ஷெட்டி மனைவி பிரகதி நெகிழ்ச்சி | 300 கோடி வசூல் படங்கள் : லாபக் கணக்கு எவ்வளவு ? | அடுத்த மல்டிபிளக்ஸ் திறக்கப் போகும் மகேஷ்பாபு | 50 கோடி வசூல் கடந்த 'இட்லி கடை' | என் அணிக்கு தமிழக அரசு ஸ்பான்சரா: அஜித் விளக்கம் |
கவுதம் மேனன் இயக்கத்தில் ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைப்பில், அஜித், அனுஷ்கா, த்ரிஷா, அருண் விஜய் மற்றும் பலர் நடித்து 2015ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 5ம் தேதி வெளிவந்த படம் 'என்னை அறிந்தால்'.
வசூல் ரீதியாக பெரிய அளவில் வெற்றியைப் பெறவில்லை என்றாலும் அஜித் ரசிகர்களுக்குப் பிடித்த ஒரு படமாக அமைந்தது. அப்படத்தில் அருண் விஜய் வில்லனாக நடித்து தனக்கான மாற்றத்தை ஏற்படுத்திக் கொண்டார்.
இன்றுடன் அப்படம் வெளிவந்து ஏழு ஆண்டுகள் நிறைவடைகிறது. அதை கேக் வெட்டி கொண்டாடியிருக்கிறது படக்குழு. இயக்குனர் கவுதம் மேனன், அருண் விஜய், எடிட்டர் ஆண்டனி உள்ளிட்டவர்கள் அதில் கலந்து கொண்டனர்.
“ஏழு வருடங்கள்…விக்டர் கதாபாத்திரம் பிறந்தநாளை அதன் கிரியேட்டர் கவுதம் மேனனுடன் கொண்டாடுகிறேன். இத்தனை வருடங்களாக என் மீது அன்பு காட்டும் உங்களுக்கும், அஜித் சாருக்கும் நன்றி,” என அருண் விஜய் இந்தக் கொண்டாட்டம் பற்றிக் குறிப்பிட்டுள்ளார்.