ரஜினி, கமல் கூட்டணி படம் : பிரதீப் ரங்கநாதன் பதில் | விஜய் ஆண்டனியின் அடுத்தபடம் பற்றிய தகவல் | நாகர்ஜூனாவின் 100வது படம் தொடங்கியது | பான் இந்தியா படம் : பிரசாந்த் ஆர்வம் | நான் அவனில்லை : இயக்குனர் பாரதி கண்ணன் விளக்கம் | 'காந்தாரா சாப்டர்1' காஸ்ட்யூம் டிசைன்: ரிஷப் ஷெட்டி மனைவி பிரகதி நெகிழ்ச்சி | 300 கோடி வசூல் படங்கள் : லாபக் கணக்கு எவ்வளவு ? | அடுத்த மல்டிபிளக்ஸ் திறக்கப் போகும் மகேஷ்பாபு | 50 கோடி வசூல் கடந்த 'இட்லி கடை' | என் அணிக்கு தமிழக அரசு ஸ்பான்சரா: அஜித் விளக்கம் |
கொரோனா முதல் அலை பரவிய பிறகு 2020ம் ஆண்டில் இந்தியாவில் உள்ள ஓடிடி நிறுவனங்களுக்கு திடீர் என பிரபலம் அதிகமானது. தியேட்டர்கள் மூடப்பட்டதாலும், அலுவலகங்கள், பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டதாலும் மக்கள் பொழுதுபோக்கிற்காக ஓடிடி நிறுவனங்களில் சந்தாதாரர்களாக சேர ஆரம்பித்தார்கள். அந்த சமயத்தில் புதிய படங்களையும் நேரடியாக ஓடிடியில் வெளியிட, கடகடவென ஓடிடி நிறுவனங்கள் பல புதிய சந்தாதாரர்களைப் பெற ஆரம்பித்தன.
கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா காரணமாக அடிக்கடி தியேட்டர்கள் மூடப்படுவதாலும், ஓடிடியில் வெப் சீரிஸ்கள், நிகழ்ச்சிகள் என பலவற்றை அறிமுகப்படுத்த ஆரம்பித்தார்கள். தற்போது பல லட்சம் பேர் வெவ்வேறு விதமான ஓடிடி நிறுவனங்களின் சந்தாதாரர்களாக ஆகிவிட்டனர். இது எதிர்காலத்தில் இன்னும் அதிகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது இந்தியாவில் உள்ள ஓடிடி நிறுவனங்களில் எந்த நிறுவனம் அதிக சந்தாதாரர்களை வைத்துள்ளது என்பது குறித்து கடந்த பத்து நாட்களாகவே ஒரு செய்தி பரவி வருகிறது. ஆனால், இதை எந்த நிறுவனமும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை என்பது குறிப்பிட வேண்டிய ஒன்று.
வெளியாகியுள்ள செய்திகளின் அடிப்படையில் டிஸ்னிபிளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி நிறுவனம் 4 கோடிய 60 லட்சம் சந்தாதாரர்களைப் பெற்று முதலிடத்தில் இருக்கிறதாம். அதற்கடுத்து அமேசான் பிரைம் 1 கோடியே 90 லட்சம், ஜீ 5 65 லட்சம், நெட்பிளிக்ஸ் 55 லட்சம் சந்தாதாரர்களைப் பெற்றுள்ளதாகச் சொல்கிறார்கள்.
4 கோடியே 60 லட்சம் சந்தாதாரர்களைப் பெற்று முதலிடத்தில் உள்ள ஹாட்ஸ்டார் நிறுவனம் ஒரு வருட சந்தாவாக வருடத்திற்கு ரூபாய் 499, 899, 1499 என திட்டங்களை வைத்துள்ளன. குறைந்தபட்சமாக 499 ரூபாய் என்று கணக்கில் எடுத்துக் கொண்டால் கூட 4 கோடியே 60 லட்சம் சந்தாதாரர்கள் மூலம் ஒரு வருடத்திற்கு இந்திய சந்தாதாரர்களிடம் இருந்து 2295 கோடி ரூபாயைப் பெறுகிறது ஹாட்ஸ்டார் நிறுவனம்.
இது கடந்த வருடமான 2021க்கான கணக்கு. ஆனால், தற்போது 2022ல் ஒரு வருடக் கட்டணமாக 899 மற்றும் 1499 எனவும், மாதத்திற்கு 299 எனவும் இருக்கிறது. இந்தியாவில் ஓடிடி வியாபாரம் பெரிய அளவில் உயர்ந்து வருகிறது என்பதையே இது காட்டுகிறது.