காந்தாரா சாப்டர்-1 : நேஷனல் கிரஷ் ஆன ருக்மணி வசந்த்! | மீண்டும் ஹிந்தியில் கால் பதிக்கும் ராஷி கண்ணா! | 82 கோடி வசூல் : தெலுங்கு ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த ரிஷப் ஷெட்டி! | பிரதமருடன் நடிகர் ராம் சரண் சந்திப்பு | செருப்பு அணிந்து அபுதாபி மசூதிக்குள் சென்றாரா சோனாக்ஷி சின்ஹா? | 3வது முறையாக ரஜினி- நெல்சன் கூட்டணி இணையப்போகிறது? | மலையாளிகளிடம் அங்கீகாரம் தந்தது 'ராவண பிரபு' படம் தான் ; ரீ ரிலீஸ் குறித்து வசுந்தரா தாஸ் மகிழ்ச்சி | ஒரிஜினலை விட டீப் பேக் வீடியோவுக்கு வியூஸ் அதிகம் ; ஜிமிக்கி கம்மல் நடிகை விரக்தி | பண்ணை வீடு திருட்டு சம்பவம் ; துப்பாக்கி லைசென்ஸுக்கு விண்ணப்பித்த சங்கீதா பிஜ்லானி | சுஹர்ஷ் ராஜ் நடித்த மியூசிக் வீடியோ: அனூப் ஜலோடா, பாடகி மதுஸ்ரீ பாராட்டு |
கோடியில் ஒருவன் படத்துக்குப் பிறகு தமிழரசன், அக்னிச் சிறகுகள், காக்கி, பிச்சைக்காரன் 2, மழை பிடிக்காத மனிதன் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார் விஜய் ஆண்டனி. இதற்கு இடையில் கொலை என்ற படத்தில் நடித்து முடித்து விட்டார்.
பாலாஜி குமார் இயக்கி வரும் இப்படத்தை இன்பினிட்டி பிலிம் பிக்சர்ஸ், லோட்டஸ் பிக்சர்ஸ், டேபிள் ப்ராபிட் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன. இதில் ரித்திகா சிங், ராதிகா சரத்குமார், மீனாட்சி சவுத்ரி, அர்ஜுன் சிதம்பரம், முரளி சர்மா உள்ளிட்ட பலர்நடித்துள்ளனர். கிரிஷ் கோபாலகிருஷ்ணன் இசையமைக்கும் இப்படத்துக்கு சிவகுமார் விஜயன் ஒளிப்பதிவு செய்கிறார்.
கடந்த அக்டோபர் மாதம் தொடங்கப்பட்ட இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது நிறைவடைந்துள்ளது. தற்போது டப்பிங் மற்றும் பின்னணி இசை கோர்ப்பு பணிகள் தொடங்கி உள்ளது. வருகிற ஏப்ரல் மாதம் படத்தை வெளியிட திட்டமிட்டிருக்கிறார்கள். ஒரு கூட்டு குடும்பத்திற்குள் ஒரு கொலை நடக்கிறது. அதை செய்தது யார்? எதற்காக? அது எப்படி கண்டுபிடிக்கப்படுகிறது என்பதுதான் படத்தின் கதை என்கிறார்கள்.