இருமுடி கட்டி சபரிமலை சென்ற நடிகர்கள் கார்த்தி, ரவி மோகன் | வீர தீர சூரன் 2 : அடுத்த வாரம் ஓடிடி ரிலீஸ் | ஆங்கிலத்தில் பேசச் சொன்ன தொகுப்பாளர் : தமிழில்தான் பேசுவேன் என்ற அபிராமி | முதல் பட ஹீரோ ஸ்ரீ-க்கு ஆதரவாக லோகேஷ் கனகராஜ் | மொழிப்போர் நடக்குற நேரம்... இது எங்க மும்மொழித் திட்டம் : தக் லைப் பட விழாவில் கமல் பேச்சு | 'மண்டாடி' : சூரியின் அடுத்த படம் | மருத்துவ கண்காணிப்பில் நடிகர் ஸ்ரீ... தவறான தகவல்களை பரப்பாதீங்க.... : குடும்பத்தினர் அறிக்கை | என்னை பற்றி என் தயாரிப்பாளர்களிடம் கேளுங்கள்: பாலிவுட் பாடகருக்கு ஏ.ஆர்.ரஹ்மான் பதில் | பிளாஷ்பேக் : மம்பட்டியான் பாணியில் உருவான கொம்பேறி மூக்கன் | தன்னை போன்று குறைபாடு உடையவரையே மணந்த அபிநயா |
அறிமுக இயக்குனர் து.ப.சரவணன் இயக்கத்தில், யுவன்ஷங்கர் ராஜா இசையமைப்பில் விஷால் கதாநாயகனாக நடித்துள்ள படம் 'வீரமே வாகை சூடும்'. இந்த மாதம் 26ம் தேதி வெளிவர உள்ள இப்படத்தில் டிம்பிள் ஹயாத்தி கதாநாயகியாக அறிமுகமாகிறார்.
இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு இரு தினங்களுக்கு முன்பு ஜனவரி 14ம் தேதி சென்னையில் உள்ள தியேட்டரில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் படக்குழுவினருடன் டிம்பிள் ஹயாத்தியும் கலந்து கொண்டார். சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிலையில் டிம்பிள் ஹயாத்தி தான் கொரானோவால் பாதிக்கப்பட்டுள்ளதாக நேற்று அறிவித்துள்ளார். நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மறுநாளே அவருக்கு கொரானோ பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இது குறித்து சமூக வலைதளத்தில், “அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்தும் எனக்கு கொரானோ பாசிட்டிவ் வந்துள்ளது. லேசான பாதிப்புதான் ஏற்பட்டுள்ளது, மற்றபடி நலமாக இருக்கிறேன். ஆலோசனைப்படி என்னை வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன். நான் இரண்டு முறை தடுப்பூசி எடுத்துக் கொண்டதால்தான் லேசான பாதிப்பு இருக்கிறது. ஒவ்வொருவரும் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என்றும், மாஸ்க் அணிய வேண்டும், சானிட்டைஸ் செய்து கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன். மீண்டும் வலிமையுடன் திரும்பி வருவேன்,” என்று குறிப்பிட்டுள்ளார்.