Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பிறமொழி செய்திகள் »

மம்முட்டிக்கு கொரோனா பாதிப்பு

16 ஜன, 2022 - 03:34 IST
எழுத்தின் அளவு:
Actor-Mammootty-tested-positive-for-Covid19

கொரோனா மூன்றாவது அலையில் மீனா, த்ரிஷா, சத்யராஜ், அருண்விஜய், மகேஷ்பாபு, ஷெரின் உள்ளிட்ட பல நடிகர், நடிகைகள் பாதிக்கப்பட்டனர். அதேபோல, மலையாள பட இயக்குநர் ப்ரியதர்ஷனுக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.

இந்தநிலையில், பிரபல மலையாள நடிகர் மம்முட்டி கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக மம்முட்டி கூறுகையில், ‛தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுத்துக்கொண்ட போதிலும், நேற்று எனக்கு கோவிட் பரிசோதனையில் தொற்று உறுதி செய்யப்பட்டது. லேசான காய்ச்சல் தவிர, நான் நன்றாக இருக்கிறேன். சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் அறிவுறுத்தல்களின்படி நான் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளேன். நீங்கள் அனைவரும் பாதுகாப்பாக இருக்க வேண்டுகிறேன். எல்லா நேரங்களிலும் முகக்கவசம் அணிந்து கவனமாக இருங்கள்,' எனத் தெரிவித்துள்ளார்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
தெலுங்குப் படத்திற்கு இசையமைக்கும் ஹாரிஸ் ஜெயராஜ்தெலுங்குப் படத்திற்கு இசையமைக்கும் ... தெலுங்கில் ஒரு பாடலுக்கு குத்தாட்டம் போட்ட தமன்னா தெலுங்கில் ஒரு பாடலுக்கு ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)