நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! | ‛கில்' படத்தின் தமிழ் ரீமேக்கில் ஹீரோ, வில்லன் யார் தெரியுமா? | அரசியல் கதைகள பின்னனியில் தனுஷ் 54வது படம்! | ஆகஸ்ட் 8ல் 6 படங்கள் ரிலீஸ்… | 2025ல் 50 கோடியைக் கடந்த 10வது படம் 'தலைவன் தலைவி' | பாய் பிரண்ட் உடன் படப்பிடிப்புக்கு வரும் நடிகை | தமிழுக்காக 'வெயிட்டிங்' : சிரிக்கும் சினேகா | எல்லோருடைய வாழ்க்கையையும் வாழ ஆசை: மாசாந்த் நடராஜன் | பணம், புகழ் இருந்தாலும், நிம்மதி, கவுரவம் முக்கியம்: ரஜினிகாந்த் பேச்சு |
நெல்சன் இயக்கத்தில் விஜய். பூஜா ஹெக்டே, செல்வராகவன், யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி, அபர்ணா தாஸ் உள்பட பலர் நடித்துள்ள படம் பீஸ்ட். அனிருத் இசையமைத்திருக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. இதை அடுத்து தெலுங்கு இயக்குனர் வம்சி பைடிபள்ளி இயக்கும் படத்தில் நடிப்பதற்கு தயாராகி வருகிறார் விஜய்.
மேலும் விஜய்யின் பீஸ்ட் படம் எப்போது வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ள நிலையில், இப்படத்தில் நடித்துள்ள ரெடின் கிங்ஸ்லி அளித்துள்ள ஒரு பேட்டியில், பீஸ்ட் படம் தமிழ் புத்தாண்டு தினத்தை ஒட்டி ஏப்ரல் 14ம் தேதி கணிப்பாக திரைக்கு வந்துவிடும் என்று தெரிவித்திருக்கிறார். அதேசமயம் கொரோனா தொற்றினால் ஒருவேளை தியேட்டர்கள் மூடப்பட்டால் இந்த ரிலீஸ் தேதியில் மாற்றம் இருக்கும். அப்படி இல்லை என்றால் ஏப்ரல் 14ம் தேதி பீஸ்ட் திரைக்கு வருவது உறுதி என்று அவர் தெரிவித்திருக்கிறார்.