நான் அவனில்லை : இயக்குனர் பாரதி கண்ணன் விளக்கம் | 'காந்தாரா சாப்டர்1' காஸ்ட்யூம் டிசைன்: ரிஷப் ஷெட்டி மனைவி பிரகதி நெகிழ்ச்சி | 300 கோடி வசூல் படங்கள் : லாபக் கணக்கு எவ்வளவு ? | அடுத்த மல்டிபிளக்ஸ் திறக்கப் போகும் மகேஷ்பாபு | 50 கோடி வசூல் கடந்த 'இட்லி கடை' | என் அணிக்கு தமிழக அரசு ஸ்பான்சரா: அஜித் விளக்கம் | பிளாஷ்பேக்: சினிமாவுக்கு பாட்டு எழுதிய காளிமுத்து | பிளாஷ்பேக்: நாகேஸ்வர ராவின் தம்பியாக நடித்த நம்பியார் | 3 மணி நேரம் 40 நிமிடம் ஓடப் போகும் 'பாகுபலி தி எபிக்' | 3 ஹீரோக்கள் இணையும் படம் |
பிக்பாஸ்-4 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ரம்யா பாண்டியன் ஜோக்கர், ஆண்தேவதை படங்களை தொடர்ந்து சூர்யா தயாரித்த ராமே ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் என்ற படத்திலும் நடித்திருந்தார். அதையடுத்து தற்போது இடும்பன்காரி மற்றும் மலையாளத்தில் மம்முட்டியுடன் ஒரு படத்திலும் நடித்து வருகிறார்.
இந்நிலையில் பொங்கல் தினத்தை ஒட்டி தனது பொங்கல் வாழ்த்துகளை தெரிவித்துள்ள ரம்யா பாண்டியன், தனது மாடித் தோட்டத்தில் விளைந்த மஞ்சளை அறுவடை செய்திருக்கிறார்.
அதுகுறித்த புகைப்படத்தை சமூக வலைதளத்தில் மகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார். அதோடு வளமான விளைச்சலைத் தந்த இயற்கை அன்னைக்கு தான் நன்றி செலுத்துவதாகவும், இந்த பொங்கல் நன்னாளில் மாடித்தோட்டத்தில் மஞ்சளை அறுவடை செய்தது மிகப்பெரிய மகிழ்ச்சியை கொடுப்பதாகவும் அவர் தெரிவித்திருக்கிறார்.