படம்... பாராட்டு... பயம்... மனம் திறந்த ஸ்ரீகணேஷ் | நானும் மக்கள் பிரதிநிதி தான் - மதுவந்தி | விஷால் கோரிக்கையை நிராகரித்த சினிமா அமைப்புகள் | வெற்றிக்காக காத்திருக்கும் அப்பாவும், மகனும் | ஆட்டுக்கார அலமேலு, கல்யாணராமன், சுல்தான் : ஞாயிறு திரைப்படங்கள் | விக்ரமிற்கு ஜோடியாகும் ருக்மணி வசந்த் | கூலி படத்தில் வலிமையான கதாபாத்திரத்தில் நடிக்கிறேன் : ஸ்ருதிஹாசன் | கீரவாணிவுடன் கம்போசிங் பணியில் ராஜமவுலி | வார் 2 படத்திற்காக மீண்டும் சிக்ஸ்பேக்கிற்கு மாறிய ஜூனியர் என்டிஆர் | கூலி படத்தில் ரஜினிக்காக லோகேஷ் கனகராஜ் செய்த மாற்றம் |
மறைந்த இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் துரைப்பாண்டியனின் மகளும், பிரபல தயாரிப்பாளர் அருண்பாண்டியனின் அண்ணன் மகளுமான ரம்யா பாண்டியன் 'ஜோக்கர்' திரைப்படம் மூலம் திரையுலக வெளிச்சத்திற்கு வந்தார். அடிக்கடி போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டு லைம் லைட்டிலேயே இருப்பார். சின்னத்திரை நிகழ்ச்சிகளிலும் பங்கேற்ற அவர், சமீபத்தில் லவ்வல் தவான் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.
ரம்யா பாண்டியனுக்கு திருமணம் ஆகி மூன்று மாதமே ஆகும் நிலையில். இவருடைய சகோதரர் பரசு பாண்டியனுக்கும் திருமண ஏற்பாடுகள் நடந்து வந்தன. கடந்த சில தினங்களுக்கு முன்பு பந்தக்கால் நட்டு, நலங்கு வாய்த்த புகைப்படங்களை ரம்யா பாண்டியன் வெளியிட்டு இந்த தகவலை உறுதிப்படுத்தினார். இன்று பரசு பாண்டியனுக்கும், அவருடைய காதலிக்கும் திருமணம் நடந்து முடிந்துள்ளது. இது குறித்த புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகின்றன.
பரசு பாண்டியன் சிங்கப்பூரில் டிசைனராக பணியாற்றி வந்த நிலையில், தற்போது சென்னையில் இருப்பதாக கூறப்படுகிறது. இந்த திருமணத்தில் அருண்பாண்டியனின் குடும்பத்தினர் பலர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தி உள்ளனர்.