ஹரிஷ் கல்யாண் 15வது படம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு | நேருக்கு நேர் மோதும் சந்தானம், சூரி படங்கள்! | தமிழ் மொழிக்கான பெருமைச்சின்னம்: ஏ.ஆர்.ரஹ்மான் அறிவிப்பு | கிரிக்கெட் வீரரின் பயோபிக் படத்தை இயக்கும் பா.ரஞ்சித்! | காரில் வெடிகுண்டு வைத்து தகர்ப்போம்! சல்மான்கானுக்கு மீண்டும் கொலை மிரட்டல்! | புதிய வருடம் புதிய லைப் - ‛தக்லைப்' படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் விரைவில் வெளியாகிறது! | மாரியம்மன் கோவில் விழாவில் பாட்டு பாடி நடனமாடிய ரம்யா நம்பீசன்! | பிளாஷ்பேக்: கதையால் ஈர்க்கப்பட்டு “காவியத் தலைவி”யான நடிகை சவுகார் ஜானகி | சிம்பு 49வது படத்தில் இணைந்த சாய் அபியன்கர்! | தனுஷ், விக்னேஷ் ராஜா படம் கைவிடப்பட்டதா? |
கிராஸ் ரூட்ஸ் நிறுவனத்தின் மூலம் இயக்குனர் வெற்றிமாறன் தயாரிப்பில் வர்ஷா பரத் இயக்கியுள்ள ‛பேட் கேர்ள்' படத்தின் டீசர் சமீபத்தில் வெளியானது. 'டீசர்' காட்சிகளில் பள்ளி மாணவியர் தவறாக சித்தரிக்கப்பட்டு உள்ளதாக, பல்வேறு தரப்பினரும் குற்றச்சாட்டு தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், அகில இந்திய நாடார் கூட்டமைப்பு சார்பில் வெளியான கண்டன அறிக்கை: பேட் கேர்ள் திரைப்படத்தில் இந்து பிராமண சமூக கலாசாரத்தை இழிவுபடுத்தும் வகையிலும், குறிப்பாக பள்ளியில் படிக்கும் பிராமண பெண் குழந்தைகளை சிறுமிகளை பற்றி தவறாக கருத்தை பரப்பும் வகையில் படத்தின் டீசர் வெளியாகி உள்ளது.
மேலும், கட்டற்ற பாலியல் சுதந்திரம், 18 வயது பூர்த்தியடையாத பள்ளிகளில் படிக்கும் சிறுமிகளுக்கு பாலியல் சுதந்திரம், சிறுமிகளின் தற்கொலை மிரட்டல் என காட்சிகளும் வெளியாகி உள்ளன. அதேபோல், படிக்கும் பெண் குழந்தைகள் பாலியல் உறவில் ஈடுபடுவதை சரி என்று பெற்றோரிடம் வாதம் செய்வதையும் பெற்றோர்கள் பெண் குழந்தைகளை கண்டிப்பதை அராஜகம் என்றும் சித்தரிக்கும் வகையில் காட்சிகள் அமைந்துள்ளன. இந்து பெண் குழந்தைகளை தவறாக வழி நடத்துவதும் இந்த படம், போக்சோ சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டிய ஒரு திரைப்படமாகும்.
மேலும் இப்படத்தை புகழ்ந்து பேசி உள்ள இயக்குனர்கள் வெற்றிமாறன், ரஞ்சித், நடிகர் விஜய் சேதுபதி உள்ளிட்டோர் பெண் விடுதலை என்கிற பெயரில் இந்த திரைப்படத்தை புரட்சி படம் என்று சொல்லி இருக்கிறார்கள். மேற்கண்ட இந்த படத்தை தயாரித்தோர், நடித்தோர், இயக்கியோர் உள்ளிட்டோர் குடும்பங்களில் அவர்கள் வீட்டு பெண் குழந்தைகளை இதுபோன்று தவறு செய்து கெட்டுப் போவதை அனுமதிப்பார்களா? வேண்டுமென்றே தமிழர்களின் குடும்ப அமைப்பை சீர்குலைக்கும் வகையிலும் பெற்றோர் குழந்தைகள் உறவை கெடுக்கும் வகையிலும் பள்ளிக்கூடம், கல்விச்சூழல் ஆகியவற்றை சிதைக்கும் வகையிலும் காட்சிப்படுத்தி உள்ளார்கள்.
இந்த திரைப்படத்தை தடை செய்வதோடு இந்த திரைப்படத்தை தயாரித்து உள்ளவர்களை போக்சோ சட்டத்தில் கைது செய்ய வேண்டும். ரஞ்சித், வெற்றிமாறன், விஜய் சேதுபதி, போன்றவரையும் போக்சோ சட்டத்தில் கைது செய்ய வேண்டி கோரிக்கை புகார் மனு இந்து மக்கள் கட்சி சார்பில் சமர்ப்பிக்கப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.