ஹரிஷ் கல்யாண் நடிக்கும் 'தாஷமக்கான்' | மணிரத்னம் படத்தில் நடிக்க மறுத்தாரா சாய் பல்லவி? | நெட்பிளிக்ஸ் முடிவு : அதிர்ச்சியில் தென்னிந்திய திரையுலகம் | விமலின் மகாசேனா படம் டிசம்பர் 12ல் திரைக்கு வருகிறது | பராசக்தி பட டப்பிங்கில் அதர்வா | கோவா சர்வதேச பட விழாவில் அமரன் : சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி | எங்களைப் பொறுத்தவரை உபேந்திரா தெலுங்கின் சூப்பர் ஹீரோ தான் : ராம் பொத்தினேனி | ப்ரோ கோட் டைட்டில் விவகாரம் : நீதிமன்ற விசாரணையில் ரவி மோகனுக்கு சாதகம் | ‛கில்' பட ரீமேக்கில் இருந்து விலகிய துருவ் விக்ரம் | வாட்ச் மீதுள்ள காதல் குறித்து தனுஷ் |

ஆனந்த் சங்கர் இயக்கத்தில், தமன் இசையமைப்பில், விஷால், ஆர்யா, மிர்ணாளினி ரவி மற்றும் பலர் நடிப்பில் கடந்த வருடம் வெளிவந்த படம் 'எனிமி'. இப்படத்தில் இடம் பெற்ற 'டம் டம்' என்ற பாடல் கடந்த வருடத்தின் சூப்பர் ஹிட் பாடல்களில் ஒன்றாக அமைந்தது. இப்பாடல் தற்போது 100 மில்லியன் பார்வைகளை யூடியூப்பில் கடந்துள்ளது. இரண்டே மாதத்தில் இந்தப் பார்வைகைளைப் பெற்றுள்ளது குறிப்பிட வேண்டிய ஒன்று.
விஷால் நடித்த பாடல் ஒன்று 100 மில்லியன் பார்வைகளைப் பெறுவது இதுவே முதல் முறை. இதற்கு முன்பு அவர் நடித்த பல படங்களின் பாடல்கள் ஹிட்டானாலும் அதில் ஒரு பாடல் கூட யூடியூப்பில் 100 மில்லியன் பார்வைகளைத் தொட்டதில்லை.
கடந்த வருடம் வெளிவந்த படங்களில் 'மாஸ்டர்' படத்தின் 'வாத்தி கம்மிங்', 'ஈஸ்வரன்' படத்தின் 'மாங்கல்யம்..', 'டாக்டர்' படத்தின் 'செல்லம்மா' ஆகிய பாடல்கள் மட்டுமே 100 மில்லியன் கிளப்பில் இருந்தவை. இப்போது 'எனிமி' படத்தின் 'டம் டம்' பாடலும் அதில் இணைந்துவிட்டது. தமனுக்கு 'மாங்கல்யம், டம் டம்' என இரண்டு 100 மில்லியன் பாடல்கள் அமைந்துவிட்டது.




