லாயராக அதுல்யா ரவி, மீனவனாக நான் : டீசல் ரகசியம் சொல்லும் ஹரிஷ் கல்யாண் | காதல், நகைச்சுவை கதைகளில் நடிக்க ஆர்வமாக இருக்கும் ருக்மணி வசந்த் | விண்வெளியில் நான்காவது திருமணம் செய்கிறாரா ஹாலிவுட் நடிகர் டாம் குரூஸ் | அஜித் 64வது படத்தின் அறிவிப்பு எப்போது? : ஆதிக் ரவிச்சந்திரன் தகவல் | ஓடிடிக்கு வருகிறது லோகா சாப்டர் 1 | டியூட் படத்தில் பிரதீப் பாடிய ‛சிங்காரி' பாடல் வெளியானது | தனுஷ் படத்தின் நாயகி யார்... நீடிக்கும் குழப்பம்? | ஜீவா, ராஜேஷ் படத்தில் இணையும் ரம்யா ரங்கநாதன் | ‛பேராண்டி' படத்தில் மனோரமா பாடிய கடைசி பாடல் | 'பைசன்' என் முதல் படம் மாதிரி: துருவ் விக்ரம் |
2022ம் ஆண்டு ஆரம்பமே கொரானோ தாக்கத்தால் ஆரம்பமாகியதால் கொஞ்சம் களையிழந்து காணப்படுகிறது. இந்த வருடப் பொங்கல் கொண்டாட்டம். பொதுவாக பொங்கலுக்கு ஒரு காலத்தில் பத்து படங்கள் வரை கூட வெளிவந்து, பொங்கல் விடுமுறை நாட்கள் களை கட்டும். அதில் சில முன்னணி நடிகர்களின் படங்களும் இருக்கும்.
இந்த வருடப் பொங்கலுக்கு முன்னணி நடிகர்களின் படங்கள் இல்லை, சிறிய பட்ஜெட் படங்கள்தான் வெளியாகியிருக்கிறது. அதிலும் 50 சதவீத இருக்கை அனுமதி என்ற கட்டுப்பாடும் உள்ளது. இந்த பொங்கலை முன்னிட்டு, ஜனவரி 13ம் தேதி “கார்பன், என்ன சொல்லப் போகிறாய், கொம்பு வச்ச சிங்கம்டா, நாய் சேகர்” ஆகிய படங்களும் ஜனவரி 14ம் தேதி “தேள்,” படமும் வெளியாகியது. நேற்று 'பாசக்காரப்பய' என்ற ஒரு படமும் வெளியாவதாக அறிவிப்பு வெளியிட்டிருந்தார்கள். ஆனால், அந்தப் படம் எந்தத் தியேட்டரில் ஓடுகிறது என்று தேடிப் பார்த்தாலும் தகவல் கிடைக்கவில்லை.
பொங்கலை முன்னிட்டு வெளியான படங்களுக்கு ரசிகர்களிடம் பெரிய வரவேற்பில்லை என்றுதான் தகவல் வருகிறது. சில படங்களுக்கு பல ஊர்களில் ரசிகர்கள் வராத காரணத்தால் முதல் நாள், முதல் காட்சி கூட ரத்து செய்யப்பட்டிருக்கிறது. சில படங்களுக்கு 10, 20 பேர் வரை வந்தாலும் காட்சிகளை நடத்துகிறார்களாம். கொரானோ பயம் ஒரு பக்கம், முன்னணி நடிகர்களின் படங்கள் இல்லாதது ஒரு பக்கம் என இந்த வருட சினிமா பொங்கல் களையிழந்துள்ளதாக கவலைப்படுகிறார்கள் திரையுலகத்தினர்.