என் படங்களுக்காக ரசிகர்களை எதிர்ப்பார்ப்புடன் காத்திருக்க வைப்பேன்! - விஷ்ணு விஷால் | விளையாட்டால் நிகழும் பிரச்னையே ‛கேம்' : சொல்கிறார் ஷ்ரத்தா ஸ்ரீநாத் | நெல் விவசாயத்தில் இறங்கிய நயன்தாரா பட இயக்குனர் | தெலுங்கில் முதல் முறையாக நுழைந்த அக்ஷய் கன்னா ; சுக்ராச்சாரியார் கதாபாத்திரத்தில் நடிக்கிறார் | கன்னட நடிகர் தர்ஷனுக்கு தனிமை சிறை ஏன்? நீதிமன்றத்தில் மனு தாக்கல் | 'திரிஷ்யம் 3' ; ஜீத்து ஜோசப் வெளியிட்ட முதல் புகைப்படம் | ஜீவாவின் 'தலைவர் தம்பி தலைமையில்' படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது! | காதலில் கரைபவர் வெகு சிலரே : தனுஷின் ‛தேரே இஷ்க் மே' டீசர் வெளியீடு | கமல் பிறந்தநாள் : ரீ-ரிலீஸாகும் ‛நாயகன்' | படிப்புக்கும் நடிப்புக்கும் சம்பந்தமில்லை: பள்ளிகால அனுபவம் பகிர்ந்த அனுபமா பரமேஸ்வரன் |
மும்பை: 'பஹல்காம் தாக்குதல் காட்டுமிராண்டித்தனமானது; ஜம்மு-காஷ்மீருக்கு பிரதமர் மோடி அமைதியைக் கொண்டு வருவார்' என்று நடிகர் ரஜினி கூறினார்.
மும்பையில் 'வேவ்ஸ்' உலக ஆடியோ விஷூவல் பொழுதுபோக்கு மாநாட்டை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். மாநாட்டில் நடிகர்கள் மோகன்லால், ரஜினி, ஹேமமாலினி, சிரஞ்சீவி, அக்சய்குமார், மிதுன் சக்ரவர்த்தி உள்ளிட்டோரும் தொழில்துறைத் தலைவர்கள் மற்றும் அரசியல் பிரமுகர்கள், திரைத்துறையினர் பலரும் கலந்து கொண்டனர்.
இந்த விழாவில் ரஜினி பேசியதாவது: ‛‛பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல் காட்டுமிராண்டித்தனமானது மற்றும் இரக்கமற்றது, பிரதமர் நரேந்திர மோடி ஜம்மு-காஷ்மீருக்கு அமைதியைக் கொண்டுவரும் ஒரு போராளி.
பொழுதுபோக்குகளில் கவனம் செலுத்துவதால், தேவையற்ற விமர்சனங்கள் காரணமாக அரசு, இந்த நான்கு நாள் நிகழ்வை ஒத்திவைக்கக் கூடும் என்று பலர் கூறினர். ஆனால் பிரதமர் மோடி மீதான எனது நம்பிக்கையின் காரணமாக இந்த நிகழ்வு நிச்சயமாக நடக்கும் என்று நான் நம்பிக்கையுடன் இருந்தேன். அதன்படியே, இந்நிகழ்ச்சி நடைபெற்றது.
பஹல்காம் தாக்குதல் மனிதத்தன்மையற்றது, இது முழு நாட்டையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. பயங்கரவாதம் என்பது மனிதகுலத்தின் எதிரி. இதை ஒழிக்க அனைவரும் ஒன்றுபட வேண்டும். பிரதமர் மோடி போராளி, அவர் ஜம்மு-காஷ்மீரில் நிலையான அமைதியை கொண்டுவருவார்.
இவ்வாறு ரஜினி பேசினார்.