தேசிய விருது : தேர்வு குழுவிற்கு நடிகை ஊர்வசி கேள்வி | மீரா மிதுனை கைது செய்து ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவு | மீண்டும் ஹிந்தி படத்தில் கமிட்டான ராஷி கண்ணா | ஜூனியர் என்டிஆர் உடன் நடித்தது ஒரு கற்றல் அனுபவம் : சொல்கிறார் ஹிருத்திக் ரோஷன் | ரஜினிக்கும், தனது தந்தைக்கும் உள்ள ஒற்றுமையை கூறிய லோகேஷ் | குடும்பத்துடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்த சூர்யா | துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? |
நடிகர் சித்தார்த், அவ்வப்போது சோஷியல் மீடியாவில் கருத்து தெரிவித்து சர்ச்சைகளில் சிக்கி கொள்வதை வாடிக்கையாக வைத்துள்ளார். அந்தவிதமாக கடந்த சில தினங்களுக்கு முன் பஞ்சாப்பில் பிரதமரின் பாதுகாப்பில் ஏற்பட்ட குளறுபடி குறித்து கருத்து தெரிவித்த பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால் பதிவிட்ட கருத்துக்கு, அவரது பாலினம் குறித்து குறிப்பிடும் விதமாக பதில் அவதூறான கருத்துக்களை வெளியிட்டு இருந்தார் சித்தார்த்.
இதற்கு மிகப்பெரிய எதிர்ப்பு கிளம்பியது. மேலும் தேசிய மகளிர் ஆணையம் சித்தார்த் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என தமிழக மற்றும் மகாராஷ்டிரா காவல்துறையில் புகார் அளித்தனர்.
இதை தொடர்ந்து தனது கருத்தில் உள்நோக்கம் எதுவும் இல்லை என்று சொல்லி சமாளிக்க பார்த்தார் சித்தார்த். ஆனால் பிரச்சனையின் தீவிரம் அடங்குவதாக தெரியவில்லை. இந்தநிலையில் நேற்று இரவு வெளியிட்டுள்ள ஒரு கடிதம் மூலமாக சாய்னா நேவாலிடம் அவர் பகிரங்கமாக மன்னிப்பு கேட்டுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது ;
“அன்புள்ள சாய்னா, சில நாட்களுக்கு முன்பு உங்களின் டுவீட்டுக்கு பதிலடியாக நான் எழுதிய எனது முரட்டுத்தனமான நகைச்சுவைக்காக நான் உங்களிடம் மன்னிப்பு கேட்க விரும்புகிறேன். பல விஷயங்களில் நான் உங்களுடன் உடன்படாமல் இருக்கலாம் ஆனால் உங்கள் ட்வீட்டை படிக்கும்போது எனக்கு ஏற்பட்ட ஏமாற்றம் அல்லது கோபம் கூட என் தொனியையும் வார்த்தைகளையும் நியாயப்படுத்த முடியாது.
நாம் சொன்ன ஒரு நகைச்சுவையை விளக்க வேண்டும் என்றால், அது ஒரு நல்ல ஜோக்கே அல்ல.. ஒர்க் அவுட் ஆகாத அந்த நகைச்சுவைக்கு மன்னிக்கவும். இருந்தாலும், நான் நகைச்சுவையாக சொன்ன விஷயத்தில் உள்நோக்கமும் எதுவும் கொண்டிருக்கவில்லை என்பதையும் தெரியப்படுத்தி கொள்கிறேன்.
பெண்ணியம் பேசுபவர்களுக்கு நான் எப்போதுமே துணை நிற்பவன். பாலினம் பற்றி நான் எதுவும் குறிப்பிடவில்லை.. அதனால் ஒரு பெண் என்கிற கண்ணோட்டத்தில் உங்களைத் தாக்கும் நோக்கம் நிச்சயமாக இல்லை என்றும் உறுதியளிக்கிறேன். இந்த எனது கடிதத்தை ஏற்றுக்கொள்வதன் மூலம் இந்த விஷயத்தை நம் இருவருக்குள்ளேயே முடித்துக்கொள்ளலாம் என நம்புகிறேன்.. நீங்கள் எப்போதும் என் சாம்பியனாகவே இருப்பீர்கள்” என கூறியுள்ளார் சித்தார்த்