லாயராக அதுல்யா ரவி, மீனவனாக நான் : டீசல் ரகசியம் சொல்லும் ஹரிஷ் கல்யாண் | காதல், நகைச்சுவை கதைகளில் நடிக்க ஆர்வமாக இருக்கும் ருக்மணி வசந்த் | விண்வெளியில் நான்காவது திருமணம் செய்கிறாரா ஹாலிவுட் நடிகர் டாம் குரூஸ் | அஜித் 64வது படத்தின் அறிவிப்பு எப்போது? : ஆதிக் ரவிச்சந்திரன் தகவல் | ஓடிடிக்கு வருகிறது லோகா சாப்டர் 1 | டியூட் படத்தில் பிரதீப் பாடிய ‛சிங்காரி' பாடல் வெளியானது | தனுஷ் படத்தின் நாயகி யார்... நீடிக்கும் குழப்பம்? | ஜீவா, ராஜேஷ் படத்தில் இணையும் ரம்யா ரங்கநாதன் | ‛பேராண்டி' படத்தில் மனோரமா பாடிய கடைசி பாடல் | 'பைசன்' என் முதல் படம் மாதிரி: துருவ் விக்ரம் |
திருட்டுப்பயலே, கந்தசாமி உள்பட பல படங்களை இயக்கியவர் சுசிகணேசன். தற்போது வஞ்சம் தீர்த்தாயடா என்ற படத்தை இயக்கி வருகிறார். 1980களில் மதுரையில் நடந்த உண்மை சம்பவத்தின் அடிப்படையில் இந்த படம் உருவாகிறது. மேலும் இந்த படத்தில் நடிக்கும் நடிகர், நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த தகவல்களை இன்னும் அறிவிக்காத சுசிகணேசன், தற்போது வஞ்சம் தீர்த்தாயடா படத்திற்கு இளையராஜா இசையமைப்பதாக தகவல் வெளியிட்டுள்ளார்.
இதற்கு முன்பு சுசி கணேசன் இயக்கிய படங்களுக்கு தேவா, வித்யாசாகர், பரத்வாஜ் போன்றவர்கள் இசையமைத்துள்ள நிலையில் முதன்முறையாக இந்த படத்தில் இளையராஜாவுடன் அவர் இணைந்திருக்கிறார். மேலும் இந்த படத்தை அடுத்து வீர தமிழச்சி வேலு நாச்சியாரின் வாழ்க்கை வரலாறு கதையை நயன்தாராவை வைத்து சுசிகணேசன் இயக்கத் திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.