69வது படம் : வினோத்திற்கு விஜய் போட்ட உத்தரவு | அஜித், கமல் வழியைப் பின்பற்றுவார்களா ரஜினி, விஜய்? | கிடைத்த வாய்ப்பை மிஸ் பண்ணிவிட்டேன்: அஜித் உடன் இணைவது குறித்து விஷ்ணுவர்தன் தகவல் | நவ., 22ல் ரிலீஸாகும் மிருணாள் குல்கர்னியின் ‛தாய் ஆகர்' | முன்ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்த நடிகை கஸ்தூரி | பாலகிருஷ்ணாவிடம் சூர்யாவை மாட்டி விட்ட கார்த்தி | குபேரா படம் பற்றி ராஷ்மிகா வெளியிட்ட அப்டேட் | 2024 - தீபாவளி படங்கள் கற்றுத் தந்த பாடம் என்ன? | 'புஷ்பா 2' பதிவுகளை புறக்கணிக்கும் தேவி ஸ்ரீ பிரசாத் | விடை பெற்றார் நடிகர் டெல்லி கணேஷ் ; வான் படை சார்பில் அஞ்சலி : உடல் தகனம் |
மைனா, ஜன்னல் ஓரம், வீரம், ஆள், குரங்கு பொம்மை, கொடி வீரன், காற்றின்மொழி படங்களில் நடித்தவர் விதார்த். முதன் முறையாக ஹிப் ஆப் தமிழா ஆதி நடித்துள்ள அன்பறிவு படத்தில் வில்லனாக நடித்துள்ளார். இந்த படம் இன்று டிஷ்னி பிளஸ் ஓடிடி தளத்தில் வெளியாகி உள்ளது.
வில்லனாக நடித்தது குறித்து அவர் கூறியதாவது: இந்தப்படத்தின் ஆரம்ப கட்டத்தில், இயக்குநர் அஷ்வின் ராம் என்னை வில்லன் கதாபாத்திரத்தில் எப்படி கற்பனை செய்தார் என்று நான் ஆச்சரியப்பட்டேன். நான் இதுவரை பணியாற்றிய பெரும்பாலான படங்களில், எனது கதாபாத்திரங்கள் பெரும்பாலும் மென்மையானவையாகவே இருக்கும். இருப்பினும், அஷ்வின் திரைக்கதையை விவரித்தபோது, இந்த பாத்திரம் எனது திறனை வேறு பரிமாணத்தில் காட்ட உதவும் என்று நான் நம்பினேன்.
சூழ்நிலையை வெல்ல எப்போதும் தந்திரமான முறைகளை நம்பும் பசுபதி எனும் கதாபாத்திரத்தில் நான் நடித்திருக்கிறேன். இந்த கதாப்பாத்திரம் பொதுமக்களிடம் தூய்மையையும், நேர்மையையும் வெளிப்படுத்துவதாக இருக்கும், ஆனால் கிராம மக்களிடையே சச்சரவு மற்றும் மோதலை உருவாக்குவதற்கு மூல காரணமாக இருக்கும்.
இயக்குனர் என் கதாபாத்திரத்தில் என்ன வேண்டினாரோ, அதை என் முழு அர்ப்பணிப்பை தந்து நிறைவேற்றினேன். அன்பறிவு படத்தில் பணியாற்றுவது மிகவும் அசாதாரண அனுபவமாக இருந்தது, ஏனெனில் அதில் நெப்போலியன் , ஆஷா சரத் போன்ற அனுபவம் வாய்ந்த நட்சத்திரங்கள் இருந்தனர். என்றார்.