ஹிந்தி நடிகர் தர்மேந்திரா காலமானார் | தளபதி திருவிழா : விஜய்க்காக களமிறங்கும் பிரபல பாடகர்கள் | 100 கோடிக்கு மேல் விற்கப்பட்டதா 'ஜனநாயகன்' ? | ரூ.10 கோடி டெபாசிட் செய்ய விஷாலுக்கு கோர்ட் உத்தரவு | விஜய் சேதுபதி, பூரி ஜெகன்னாத் படத்தின் படப்பிடிப்பு நிறைவு | ஒரு வருட இடைவெளிக்குப் பிறகு கீர்த்தி சுரேஷ் படம் | தெரு நாய்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்த நிவேதா பெத்துராஜ் | 2025 : 11 மாதங்களில் 250ஐக் கடக்கும் தமிழ்ப் பட வெளியீடுகள் | படம் இயக்க தயாராகும் கிர்த்தி ஷெட்டி | சிக்ஸ் பேக் மூலம் என்னை நானே செதுக்கி கொண்டேன் : மகத் சொல்கிறார் |

சர்வதேச அளவில் இசைத்துறையில் சிறந்து விளங்கும் கலைஞர்களுக்கு ஆண்டுதோறும் கிராமி விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. சினிமாவுக்கு ஆஸ்கர் விருது போன்று இசைத் துறைக்கு இந்த விருது கொண்டாடப்படுகிறது. ஆண்டுதோறும் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்செல்ஸ் நகரில் நடைபெறும் இந்த விழாவில் இசைத்துறையின் பல்வேறு பிரிவுகளில் சாதனை படைத்தவர்களுக்கு விருதுகள் வழங்கப்படும்.
இந்த ஆண்டுக்கான கிராமி விருதுகள் வழங்கும் விழா வருகிற 31ம்தேதி நடைபெறுவதாக இருந்தது. அமெரிக்காவில் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வரும் நிலையில், குறிப்பாக லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் பெரும் பாதிப்பு உள்ள சூழ்நிலையில் கிராமி விருது விழாவை தள்ளி வைக்க முடிவு செய்துள்னர்.
"உலகச் சிறந்த இசை கலைஞர்கள் கூடும் இந்த விழா அசாதாரண சூழ்நிலை கருதியும், இசை கலைஞர்கள், ரசிகர்களின் பாதுகாப்பு கருதியும் தள்ளி வைக்கப்படுகிறது. வருகிற மார்ச் 14ம் தேதி விழாவை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. எனினும் அப்போதுள்ள சூழ்நிலைகளை கருத்தில் கொண்டு உறுதி செய்யப்படும்" என்று விழாக் குழுவினர் அறிவித்துள்ளனர்.