பிரதமர் மோடி உடன் நடிகர் கமல் சந்திப்பு : கீழடி பற்றி கோரிக்கை | கூலி படத்தில் பிரீத்தி கதாபாத்திரம் கொல்லப்படுகிறதா? : ஸ்ருதிஹாசன் பதில் | இட்லி கடை படத்தின் இசை வெளியீடு எப்போது? | சிவகார்த்திகேயன் படங்களுக்கு தொடர்ந்து இசையமைக்கும் சாய் அபயன்கர் | ஹீரோவாக அறிமுகமாகும் ஷங்கரின் மகன் | இந்த வாரம் ஆக்கிரமிக்க போகும் ஓடிடி ரிலீஸ்..! | 'கிங்டம்' படத்திற்கு பாதுகாப்பு வழங்க நீதிமன்றம் உத்தரவு | புதுமுகங்களுடன் இணைந்த சோனியா அகர்வால் | பிளாஷ்பேக் : இசை அமைப்பாளர் மலேசியா வாசுதேவன் | பிளாஷ்பேக் : ஒரே படத்தில் 5 பாடல்களுக்கு நடனமாடிய லலிதா, பத்மினி |
சுராஜ் இயக்கத்தில் வடிவேலு நடிக்கும் புதிய படம் நாய் சேகர் ரிட்டர்ன்ஸ். இந்த படத்தின் இசை பணியை சந்தோஷ் நாராயணன் லண்டனில் தொடங்கியதை அடுத்து வடிவேலுவும் இயக்குனர் சுராஜ்-ம் லண்டன் சென்று இருந்தார்கள். பத்து நாட்களாக லண்டனில் தங்கி விட்டு சென்னை திரும்பிய அவர்களுக்கு கொரோனா தொற்று இருப்பதாக கண்டறியப்பட்டது. அதையடுத்து வடிவேலு சென்னை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார்.
இந்த நிலையில் தற்போது கொரோனாவில் இருந்து முழுமையாக குணம் அடைந்து வீடு திரும்பி இருக்கும் வடிவேலுவை மூன்று நாட்கள் தனிமையில் இருக்க வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளார்கள். இதையடுத்து வடிவேலு வெளியிட்டுள்ள செய்தியில், தமிழக முதல்வர் ஸ்டாலின், அமைச்சர் சுப்பிரமணியன், கம்யூனிஸ்ட் கட்சியின் பாலகிருஷ்ணன் உள்ளிட்ட தலைவர்கள் என்னிடத்தில் நலம் விசாரித்தார்கள். மக்களுக்கும் அரசியல் கட்சி தலைவர்களுக்கும் நன்றி. நான் மிகவும் நலமாக இருக்கிறேன். அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள். இந்த ஆண்டு அனைவருக்கும் மிகச் சிறப்பாக அமையும் என வாழ்த்துகிறேன் என்று வடிவேலு தெரிவித்திருக்கிறார்.