புஷ்பா 2, ஸ்த்ரீ 2-க்குப் பிறகு சாதனை வசூலில் 'சாவா' | சூர்யா 46வது படத்தின் பணி துவங்கியது | கன்னட சினிமாவில் அறிமுகமாகும் பூஜா ஹெக்டே | திருமணத்திற்கு பிறகு வாழ்க்கை எப்படி உள்ளது? தொகுப்பாளினி பிரியங்கா சொன்ன பதில் | மூன்று நாட்களில் விஜய்யின் 'சச்சின்' படம் செய்த வசூல் சாதனை! | இந்த வாரம் 'ராமாயணா' படப்பிடிப்பில் கலந்து கொள்ளும் யஷ்! | மஹாராஷ்டிரா கோலாப்பூரில் உள்ள மகாலஷ்மி கோவிலில் சாமி தரிசனம் செய்த சூர்யா - ஜோதிகா! | உங்களை நீங்களே பாராட்டிக் கொள்ளுங்கள்! - ரோஜா பூ உடன் ராஷ்மிகா வெளியிட்ட பதிவு | இரண்டாவது முறையாக ஜோடி சேரும் நிதின், கீர்த்தி சுரேஷ் | ஊர்மிளாவுக்கு 50 வயது மாதிரியா தெரிகிறது… !! |
கொரோனா இரண்டாவது அலையின் தாக்கம் குறைந்து கடந்த இரண்டு மாதங்களாக இயல்புநிலை திரும்பியுள்ள நிலையில் தற்போது ஒமைக்ரான் என்கிற பெயரில் உருமாறிய கொரோனா மூன்றாவது அலையாக மாறி ஆரம்பகட்டத்தில் உள்ளது. சமீபத்தில் லண்டன் படப்பிடிபுகாக சென்ற இடத்தில் வடிவேலு, இயக்குனர் சுராஜ் ஆகியோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்தநிலையில் மோகன்லாலை வைத்து பெருச்சாழி, அர்ஜுன் நடித்த நிபுணன், பிரசன்னா - சினேகாவின் காதல் திருமணத்திற்கு வழிவகுத்த அச்சமுண்டு அச்சமுண்டு ஆகிய படங்களை இயக்கிய இயக்குனர் அருண் வைத்தியநாதன் ஒமைக்ரானால் தான் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் சற்றே நகைச்சுவையுடன், “எனது வீட்டுக்கு ஒமைக்ரான் என்கிற விருந்தாளி வந்துள்ளார். இப்போதைக்கு அவர் என்னை பெரிதாக துன்புறுத்தவில்லை.. அதனால் நண்பர்கள் யாரும் பயப்பட வேண்டாம்.. கடந்த சில நாட்களுக்கு முன்பு வாரணாசி மற்றும் கயாவில் கும்பமேளாவில் கலந்துகொண்டு காட்சிகளை படமாக்கினோம். 28 நாட்கள் கிட்டத்தட்ட 150 பேர் என்னுடன் செட்டில் பணியாற்றினார்கள்.. ஆனால் அமெரிக்காவுக்கு வந்தபோது எனக்கு ஒமைக்ரான் பாதிப்பு என ரிசல்ட் வந்துள்ளது. கொரோனா என்பது லாஜிக்கே இல்லாத மசாலா படம் போன்றது” என கூறியுள்ளார் அருண் வைத்தியநாதன்.
இவர் தற்போது வெங்கட்பிரபு, சினேகா, யோகிபாபு ஆகியோரை வைத்து ஷாட் பூட் 3 என்கிற படத்தை இயக்கி வருகிறார். இந்தபடம் குழந்தைகளுக்கான படமாக உருவாகி வருகிறது.