பிராமணர்கள் குறித்து அவதுாறு கருத்து: மன்னிப்பு கேட்டார் 'மஹாராஜா' நடிகர் | சினிமாவை வாழ விடுங்கள்: நடிகை விஜயசாந்தி | 'கங்குவா' டிரைலரில் பாதி பார்வைகள் பெற்ற 'ரெட்ரோ' டிரைலர் | வரதட்சணை வாங்கி திருமணம் செய்து கொண்டேனா? ரம்யா பாண்டியன் கொடுத்த விளக்கம் | சிவப்பு நிறத்தில் புதிய கார் வாங்கிய ஏ. ஆர். ரஹ்மான்! | ‛போய் வா நண்பா': ‛குபேரா' படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியானது! | இன்று திருமணம் செய்து கொண்ட பிக்பாஸ் காதல் ஜோடி அமீர்- பாவனி ! | காலேஜ் ரவுடியாக நடிக்கும் சிம்பு! | 'ஜிங்குச்சா' - இரண்டு நாளில் இருபது மில்லியன் | தனது இயக்குனர்களுக்காக ஒரு அறிக்கை வெளியிடுவாரா அஜித்குமார்? |
யுவன்ஷங்கர் ராஜாவின் தயாரிப்பு நிறுவனமான ஒய்எஸ்ஆர் பிலிம்ஸ் தயாரிப்பில், சீனு ராமசாமி இயக்கத்தில், விஜய் சேதுபதி, காயத்ரி மற்றும் பலர் நடிக்கும் 'மாமனிதன்' படத்திற்கு சென்சார் நிறைவடைந்து 'யு' சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.
இப்படத்திற்கு முதல் முறையாக இளையராஜாவும், யுவன்ஷங்கர் ராஜாவும் இணைந்து இசையமைக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு 2019ம் ஆண்டு பிப்ரவரி மாதமே முடிவடைந்துவிட்டது. அதன்பிறகு பல்வேறு காரணங்களால் வெளியீடு தள்ளிப் போனது. கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா தாக்கத்தால் படத்தை வெளியிடுவதையும் தள்ளி வைத்தனர்.
இந்நிலையில் படத்தின் இரண்டு பாடல்களை சில மாதங்களுக்கு முன்பு வெளியிட்டனர். மூன்று வாரங்களுக்கு முன்பு படத்தின் டீசரையும் வெளியிட்டார்கள். தற்போது சென்சாரும் முடிவடைந்த நிலையில் படத்தின் வெளியீடு விரைவில் இருக்கும் எனத் தெரிகிறது. பொங்கலுக்கு 'வலிமை' படமும், 'ராதேஷ்யாம்' டப்பிங் படமும் வெளியாக உள்ளது. அவற்றுடன் இந்தப் படத்தை வெளியிடுவார்களா அல்லது பொங்கல் கழித்து வெளியிடுவார்களா என்பது விரைவில் தெரிய வரும்.
விஜய் சேதுபதி நடித்துள்ள 'கடைசி விவசாயி, காத்து வாக்குல ரெண்டு காதல், யாதும் ஊரே யாவரும் கேளிர்' ஆகிய படங்களும் அடுத்தடுத்து வெளியாக உள்ளன.