'மகுடம்' இயக்குனர் நீக்கம் : விஷால் செய்தது நியாயமா ? | லாபத்தில் முதலில் நுழைந்த 'பைசன்' | தீபாவளிக்கு ஜனநாயகன் அப்டேட் ஏனில்லை | பொங்கலுக்கு நடிகர் சங்க கட்டடம் திறப்பு : விஷால் திருமணம் எப்போது | பிக்பாஸில் வந்து விட்டால் மட்டும் நடிகையாகி விட முடியாது: தர்ஷிகா | ஹீரோயின் ஆனார் 'அரண்மனை' ஹர்ஷா | பிளாஷ்பேக் : சென்டிமெண்டில் அமலாவை கவிழ்த்த டி.ராஜேந்தர் | பிளாஷ்பேக்: 2 ஹீரோயின்கள் மோதிய 'மாங்கல்யம்' | சுற்றுலாவில் கீர்த்தி சுரேஷின் தலை தீபாவளி | காதலருடன் தீபாவளி கொண்டாடிய சமந்தா |
நீண்ட இடைவெளிக்கு பிறகு வடிவேலு நடிக்கும் படம் நாய் சேகர் ரிட்டர்ன்ஸ். இதனை தலைநகரம் படத்தில் நாய் சேகர் கேரக்டரை உருவாக்கிய சுராஜ் இயக்குகிறார். லைகா நிறுவனம் தயாரிக்கிறது. இதன் அறிவிப்புகள் வெளியான சில நாட்களில் தலைப்பு பிரச்சினை உருவானது. காமெடி நடிகர் சதீஷ் ஏற்கெனவே நாய்சேகர் என்ற படத்தில் நடித்து வந்தார். அவர்கள் தலைப்பை முறையாக பதிவு செய்திருப்பதால் அந்த தலைப்பு வடிவேலு படத்திற்கு கிடைக்கவில்லை.
வேறு வழியில்லாம் நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் என்ற தலைப்பில் படத்திற்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு பூஜை போட்டனர். வடிவேலு தவிர மற்ற நடிகர், நடிகைகள் முடிவாகாத நிலையில் படத்தின் பாடல் உருவாக்கத்திற்காக நாய் சேகர் குழு லண்டன் சென்றிருக்கிறது. இதில் வடிவேலு, படத்தின் இயக்குனர் சுராஜ். லைகா நிறுவனத்தின் அதிகாரி உமேஷ் குமார் ஆகியோரும் சென்றிருக்கிறார்கள். லண்டனில் சந்தோஷ் நாராயணன் படத்திற்கான பாடல்களை உருவாக்குகிறார்.