ஓடிடியில் இந்த வாரம் ரிலீஸ் என்ன...? : ஒரு பார்வை! | போலீசார் மீதான மரியாதை அதிகரித்துள்ளது : திரிதா சவுத்ரி | இறுதிக்கட்டத்தில் 'கேர்ள் பிரண்ட்' : முதல் பாடல் வெளியீடு | புதுமுகங்களின் 'தி கிளப்' | பிளாஷ் பேக்: தயாரிப்பாளர் ஆன எஸ்.எஸ்.சந்திரன் | பிளாஷ்பேக்: மலையாளத்தின் முதல் சூப்பர் ஸ்டார் | விக்ரம், பிரேம்குமார் கூட்டணி உருவானது எப்படி | ரஜினி, கமல் இணைவார்களா? : காலம் கனியுமா? | காளிதாஸ் 2 வில் போலீசாக நடித்த பவானிஸ்ரீ | 2040ல் நடக்கும் ‛ரெட் பிளவர்' கதை |
இந்தியில் வெளியாகி பெரும் பெற்றி பெற்ற ஆர்ட்டிக்கல் 15 படம் தான் தமிழில் நெஞ்சுக்கு நீதி என்ற பெயரில் ரீமேக் ஆகிறது. போலீஸ் பயிற்சிக்காக சென்ற ஒரு இளம் அதிகாரி சென்ற இடத்தில் நடந்த ஒரு பாலியல் வன்கொடுமை சம்பவத்தை வெளிச்சத்துக்கு கொண்டு வருகிற கதை அம்சம் கொண்ட படம்.
இதில் உதயநிதி, தான்யா ரவிச்சந்திரா, ஆரி அருஜுனன் மற்றும் ஷிவானி ராஜசேகர் உள்பட பலர் நடிக்கிறார்கள். போனி கபூர் தயாரிக்கிறார். கனா படத்தை இயக்கிய அருண்ராஜா காமராஜ் இயக்குகிறார்.
இந்த படத்தின் பணிகள் கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கப்பட்டது. கொரோனா பிரச்சினை, உதயநிதியின் அரசியல் பணிகள் காரணமாக படப்பிடிப்புகள் தாமதமானது. தற்போது உதயநிதி மீண்டும் நடிக்கத் தொடங்கி விட்டதால் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை நெருங்கி உள்ளது. ஜனவரி மாதம் படத்தை வெளியிட திட்டமிட்டிருக்கிறார்கள். நெஞ்சுக்கு நீதி என்பது மறைந்த திமுக தலைவர் கருணாநிதி எழுதிய சுயசரிதை நூலின் தலைப்பாகும்.