3 நாளில் 100 கோடி கடந்த 'குட் பேட் அக்லி' | பிளாஷ்பேக்: ஜெயலலிதாவின் வெள்ளித்திரைப் பயணத்திற்கு வெளிச்சம் காட்டிய “வெண்ணிற ஆடை” | புதிய காதலியுடன் விழாவில் ஆமீர்கான் | பராசக்தி, தேவதையை கண்டேன், கிங்ஸ்டன் - ஞாயிறு திரைப்படங்கள் | அர்ஜுன் தாஸ் ஜோடியாக மமிதா பைஜூ? | திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் ரம்யா பாண்டியனுக்கு கிடைத்த பவர் | லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படத்தின் அப்டேட் கொடுத்த விக்னேஷ் சிவன் | விஜய் சேதுபதியை இயக்கும் துரை செந்தில்குமார் | படையப்பா... ஜெயிலர் 2... ரம்யா கிருஷ்ணன் பகிர்ந்து சுவாரஸ்யம் | அடுத்த படத்திற்காக கதை கேட்கும் பவிஷ் |
ஏஎம்என் பைன் ஆர்ட்ஸ் என்ற அமைப்பு கலைகள் பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக நாட்டிய நிகழ்ச்சி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த பிரபல சினிமா நடன இயக்குனர் ராதிகாவைக் கொண்டு ஒரு நிகழ்ச்சியை நடத்தியது.
தொடர்நது 365 நாட்கள் தினமும் ஒரு மணி நேரம் நடன நிகழ்ச்சி நடத்தப்பட்டது. முதல் நாளில் ஒருவர், இரண்டாவது நாளில் இருவர், பத்தாவது நாளில் 10 பேர் என நாட்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப நடன கலைஞர்களின் எண்ணிக்கையும் இருந்தது. 365 நாட்கள் தொடர்ந்து நிறைவு விழாவாக நாட்டிய பெருவிழா நடத்தப்பட்டது. இதில் 600 நடன கலைஞர்கள் பங்பேற்றார்கள்.
நீதிபதிகள் முன்னிலையில் இந்த நடன நிகழ்வு கின்னஸ் சாதனையாக நிகழ்ந்தது. இதை தொடர்ந்து நடன இயக்குனர் ராதிகா மற்றும் அவரது குழுவினருக்கு கின்னஸ் சாதனை சான்றிதழ் வழங்கப்பட்டது. புதுச்சேரியில் நடந்த விழாவில் முதல்வர் ரங்கசாமி இதனை வழங்கினார்.