மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்து வாழ்த்து பெற்ற அமரன் படக்குழுவினர் | எனக்கு கடவுள் நம்பிக்கை அதிகம் - ராஷி கண்ணா | சூர்யா 45 படத்தில் ‛லப்பர் பந்து' நடிகை | சிவராஜ் குமாருக்கு பதிலாக விஷால் | விஜய் மகன் இயக்கும் படத்தில் சந்தீப் கிஷன் : அதிகாரப்பூர்வ அறிவிப்பு | 27 ஆண்டுகளுக்கு முந்தைய ஹாலிவுட் படத்தின் ரீமேக்கா விடாமுயற்சி? | 20வது பிறந்தநாளை எளிமையாக கொண்டாடிய அனிகா சுரேந்திரன் | தந்தை மறைவு : சமந்தா உருக்கமான பதிவு | கர்மா உங்களை விடாது : நயன்தாரா பதிவு யாருக்கு? | திரிஷா நடித்துள்ள மலையாள படத்தின் டீசர் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
பிரபல எழுத்தாளர் ஜெயகாந்தன் வாரப்பத்திரிகை ஒன்றில் எழுதிய அக்கினிப்பிரவேசம் என்ற சிறுகதையை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட படம் சில நேரங்களில் சில மனிதர்கள். 1977ம் ஆண்டு வெளிவந்தது. ஸ்ரீகாந்த், லட்சுமி நடித்திருந்தார்கள். பீம்சிங் இயக்கி இருந்தார். இதே தலைப்பில் ஜெயகாந்தன் எழுதிய நாவலும் புகழ்பெற்றது.
தற்போது இதே தலைப்பில் அசோக் செல்வன், அபி ஹசன், அஞ்சு குரியன், நாசர் உள்ளிட்டவர்கள் நடிப்பில் ஒரு படம் உருவாகியுள்ளது. விஷால் வெங்கட் இயக்கி உள்ளார். சமீபத்தில் நடந்த இதன் பாடல் வெளியீட்டு விழாவில் கமல்ஹாசன் கலந்து கொண்டார்.
இந்த நிலையில் எழுத்தாளர் ஜெயகாந்தனின் வாரிசுகள் கமல்ஹாசனுக்கு ஒரு கடிதம் எழுதினர். அந்த கடிதத்ததில் எங்கள் தந்தையின் அடையாளங்களில் ஒன்றான இந்த தலைப்பை மற்றவர்கள் உபயோகிக்க கூடாது. அதனை நீங்கள் தடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். இதை தொடர்ந்து கமல் தரப்பில் இருந்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இதில் எந்த முடிவும் எட்டப்படவில்லை.
இதுகுறித்து ஜெயகாந்தனின் மகள் தீபலட்சுமி விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது: அப்பாவின் 'சில நேரங்களில் சில மனிதர்கள்' என்னும் தலைப்பையே வைத்து படம் எடுத்துவரும் டைரக்டர் விஷால் வெங்கட், தயாரிப்பாளர் அஜ்மல் கான், உதவித் தயாரிப்பாளர் ரேயா ஆகியோர் வீட்டிற்கு வந்திருந்தனர். கமல்ஹாசனின் அலுவலகத்தில் பணிபுரிந்துவரும் செல்வேந்திரன் இந்த சந்திப்புக்கு ஏற்பாடு செய்திருந்தார்.
எங்கள் தரப்பில் 'சில நேரங்களில் சில மனிதர்கள்' என்னும் தலைப்பினை இன்னொரு படத்திற்கு வைப்பது என்ன விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை விளக்கினோம். 'சில நேரங்களில் சில மனிதர்களோடு' எழுத்தாளர் ஜெயகாந்தனுக்கு இருக்கும் அடையாளத்தை இந்த டிஜிட்டல் உலகம் அழித்து விடும் என்பதை விளக்கினோம்.
இதுவரை தமிழ் இலக்கிய உலகிலும், திரைப்பட வரலாற்றிலும் மிக முக்கிய இடம் வகிக்கும் 'சில நேரங்களில் சில மனிதர்கள்' எதிர்காலத் தலைமுறைக்குத் தெரியாமலேயே போய்விடும் என்பதைச் சுட்டிக்காட்டினோம். இலக்கியத்திலும், கலையிலும் மைல்கல்லாக அறியப்பட்ட படைப்புகளை பாதுகாப்பது அந்தத் துறை சார்ந்த அனைவரது பொறுப்பாகும் என்பதையும் குறிப்பிட்டோம்.
திரைப்படக் குழுவினரின் சார்பில் இவை எவற்றுக்குமே சரியான பதில் இல்லை. இந்தப் படத்தினால், 'சில நேரங்களில் சில மனிதர்கள்' புத்தகத்திற்கு ஒரு பிரமோஷன் கிடைக்குமே என்றார்கள். அப்படி ஒரு பிரமோஷன் தேவைப்படும் நிலையில் அந்தப் புத்தகம் இல்லையென்பதை எடுத்துரைத்தோம். தங்கள் படத்திற்கு இதைத் தவிர வேறு தலைப்புகளே பொருத்தமாக இல்லை என்றொரு வாதம் அவர்கள் தரப்பில் வைக்கப்பட்டது. அது நம்பும்படியாகவும் இல்லை. ஏற்றுக்கொள்ளும்படியும் இல்லை. அதையும் நாம் அவர்களிடமே தெரிவித்தோம்.
இந்தப் பிரச்சினை குறித்து கலந்தாலோசித்து, பரிசீலனை செய்து மீண்டும் தொடர்பு கொள்வதாகக் கூறினார்கள். நாம் நல்ல முடிவை எடுக்க வேண்டும் என்று நம் விருப்பத்தை தெரிவித்தோம். விடைபெற்றுச் சென்றிருக்கிறர்கள். பொறுத்திருப்போம். நல்ல முடிவினை எடுப்பார்கள், எடுக்க வேண்டும் என்றே விரும்புகிறோம்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.