மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்து வாழ்த்து பெற்ற அமரன் படக்குழுவினர் | எனக்கு கடவுள் நம்பிக்கை அதிகம் - ராஷி கண்ணா | சூர்யா 45 படத்தில் ‛லப்பர் பந்து' நடிகை | சிவராஜ் குமாருக்கு பதிலாக விஷால் | விஜய் மகன் இயக்கும் படத்தில் சந்தீப் கிஷன் : அதிகாரப்பூர்வ அறிவிப்பு | 27 ஆண்டுகளுக்கு முந்தைய ஹாலிவுட் படத்தின் ரீமேக்கா விடாமுயற்சி? | 20வது பிறந்தநாளை எளிமையாக கொண்டாடிய அனிகா சுரேந்திரன் | தந்தை மறைவு : சமந்தா உருக்கமான பதிவு | கர்மா உங்களை விடாது : நயன்தாரா பதிவு யாருக்கு? | திரிஷா நடித்துள்ள மலையாள படத்தின் டீசர் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
2021ம் ஆண்டில் கடைசி மாதம் சென்று கொண்டிருக்கிறது. இதனால் ஏகப்பட்ட படங்கள் இந்த மாதம் வெளியாகி வருகின்றன. ஒரு பக்கம் தியேட்டர்களில் வாரத்திற்கு நான்கைந்து படங்கள் வெளியாகி வரும் வேளையில் ஓடிடியிலும் நிறைய படங்கள் ரிலீஸாகின்றன. அந்தவகையில் ஜீ5 ஓடிடி தளத்தில் 'பிளட் மணி' என்ற படம் டிசம்பர் 24 அன்று நேரடியாக வெளியாகவுள்ளது.
இதில் சிரிஷ், பிரியா பவானி சங்கர், கிஷோர், சுப்பு பஞ்சு, வினோத் சாகர், ஶ்ரீலேகா ராஜேந்திரன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். சர்ஜூன் இயக்கி உள்ளார். எம்பரர் எண்டர்டெயின்மெண்ட் சார்பாக தயாரிப்பாளர் இர்பான் மாலிக் தயாரித்துள்ளார். சஸ்பென்ஸ் நிறைந்த படமாக உருவாகி உள்ளது.
பிரியா பவானி சங்கர் கூறுகையில், "'பிளட் மணி' படத்தில் நான் ஒரு உணர்ச்சிகரமான பத்திரிக்கையாளராக நடிக்கிறேன். வாழ்க்கை ஒரு வட்டம் என்பது போல பத்திரிக்கையாளராக வாழ்க்கையை ஆரம்பித்த நான் இப்படத்தில் பத்திரிக்கையாளராக நடிக்கிறேன். பல ஆச்சர்யங்களும், திருப்பங்களும் நிறைந்த, இந்த அற்புதமான சஸ்பென்ஸ் டிராமா படத்தில் நானும் பங்கேற்றிருப்பது மிகப்பெரும் மகிழ்ச்சி" என்றார்.
சிரிஷ் கூறுகையில், "பிளட் மணி திரைப்படம், ஊடகங்களின் உண்மையான சக்தியை வெளிச்சத்திற்கு கொண்டு வரும் படமாகவும், தலைப்பு செய்தியை விட அப்பாவி மனிதர்களின் வாழ்க்கை முக்கியம் என்பதையும் கூறும் படைப்பாக வரவுள்ளது" என்றார்.
இயக்குனர் சர்ஜூன் கூறுகையில், " 'பிளட் மணி' படத்தின் இயக்குனராக இருப்பது மிகப் பெருமையான தருணமாகும். வியத்தகு லொகேஷன்களில், சிறந்த நடிகர்களுடனான, மிக அற்புதமான படப்பிடிப்பு அனுபவங்கள் என 'பிளட் மணி' என் வாழ்வின் சூப்பர் ஸ்பெஷல் திரைப்படம்" என்றார்.
நடிகர் கிஷோர் கூறுகையில், "வாழ்வாதாரத்திற்காக இடம்பெயர்வது ஒன்றும் புதிய நிகழ்வு அல்ல. அதிகரித்து வரும் மக்கள் தொகை மற்றும் உலகம் முழுதும் நிகழ்ந்திருக்கும் நகரமயமாக்கலில் இன்று இது சாதாரணமாகிவிட்டது. 'ப்ளட் மணி' வாழ்வாதாரத்தை தேடி வெளிநாடுகளுக்கு செல்லும் மக்களின் அவலத்தை உணர்வுபூர்வமாக சித்தரிக்கிறது. அதே நேரம் இன்றைய சமூகத்தில் இதில் உள்ள விவரங்களை வெளிப்படுவத்திலும், சமூகத்தில் இது பற்றிய மனநிலை மாற்றத்தை ஏற்படுத்துவதில் ஊடகங்களின் பங்கையும் இது வலியுறுத்துகிறது. எல்லாவற்றிற்கும் மேலாக, பணக்கார வாழ்க்கையைத் தேடி, அனைத்தையும் விட்டுவிட்டு, வெளிநாட்டிற்கு, தெரியாத நிலத்திற்கு பயணம் செய்வதற்கு முன்பு, எவரையும் ஒருமுறைக்கு இருமுறை இந்த படம் யோசிக்க வைக்கும்" என்றார்.