ஊர்மிளாவுக்கு 50 வயது மாதிரியா தெரிகிறது… !! | ஹீரோயின்களுக்கு முக்கியத்தும் உள்ள கேங்ஸ்டர் கதையை எழுதுங்கள் : கார்த்திக் சுப்பராஜிற்கு பூஜா வேண்டுகோள் | போய் வா நண்பா…ஒரு நாளில் ஒரு மில்லியன்… | கேங்கர்ஸ் Vs சுமோ - ரசிகர்கள் ஆதரவு யாருக்கு? | 'குட் பேட் அக்லி' வினியோகஸ்தருக்கே 'ஜனநாயகன்' வினியோக உரிமை? | பிளாஷ்பேக்: விஜயகாந்த் ஜோடியாக நடித்த அனுராதா | பிளாஷ்பேக்: இரட்டை சகோதரிகளாக நடித்த மாதுரி தேவி | ''பணம் கொட்டிக்கிடக்கு... எங்களுக்கு பணத்தாசை இல்லை'': ராயல்டி விவகாரத்தில் கங்கை அமரன் 'பளீச்' | புற்றுநோய் பாதிப்பு: உதவி கேட்கும் சூப்பர்குட் சுப்பிரமணி | தேங்கி கிடந்த 'சுமோ' ஏப்., 25ம் தேதி திரைக்கு வருகிறார் |
தெலுங்கில் சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவாகியுள்ள படம் புஷ்பா. இந்தப்படத்தில் கதாநாயகியாக ராஷ்மிகா நடித்துள்ளார். இதுவரை பெரும்பாலும் மாடர்ன் பெண் கதாபாத்திரத்திலேயே நடித்து வந்த ராஷ்மிகா இந்தப்படத்தில் மலைவாழ் கிராமத்து பெண்ணாக ஸ்ரீவள்ளி என்கிற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
இந்தப்படத்தில் இவர் தமிழ், தெலுங்கு இரண்டும் கலந்த சித்தூர் பாஷை பேசும் பெண்ணாக நடித்துள்ளார். கன்னடத்தை சேர்ந்தவர் என்றாலும் தெலுங்கிலும் தனது படங்களுக்கு தானே டப்பிங் பேசி வரும் ராஷ்மிகா, இந்த படத்திற்காக சித்தூர் பாஷையை கற்று கொண்டு பேசியுள்ளார். இதற்காக தனி ஆசிரியர் ஒருவரை நியமித்து பயிற்சி எடுத்துக்கொண்டாராம் ராஷ்மிகா.
இதுபற்றி ராஷ்மிகா கூறும்போது, “பல மொழிகளில் நடிக்கிறேன் என்பதால் கிட்டத்தட்ட எனக்கு ஆறு மொழிகள் பேச தெரியும்.. ஆனால் இந்த சித்தூர் பாஷையை பேச நான் ரொம்பவே சிரமப்பட்டேன். ஆனால் தினசரி நான்கு மணி நேரம் பயிற்சி எடுத்துக் கொண்டேன். இறுதியில் ரிசல்ட் ரொம்பவே திருப்திகரமாக வந்துள்ளது” என கூறியுள்ளார்.