‛ஸ்பிரிட்' படத்தை துவங்கி வைத்த சிரஞ்சீவி! | அம்மாவை அவமானப்படுத்தியதால் பென்ஸ் கார் வாங்கிய மிருணாள் தாக்கூர்! | பிரதீப் ரங்கநாதனின் ‛எல்ஐகே' படத்தின் செகண்ட் சிங்கிள் எப்போது? | ஜூனியர் என்டிஆரை வைத்து பான் இந்திய படம் இயக்கும் ரிஷப் ஷெட்டி! | 10 கிலோ வெயிட் குறைத்தது எப்படி? கீர்த்தி சுரேஷ் வெளியிட்ட தகவல் | காதல் தோல்வி ரோல் ஏன்: தனுஷ் கேள்வி | மீண்டும் இயக்குனராக களமிறங்கும் பிரபுதேவா! | ரஜினி பிறந்தநாளில் ‛ஜெயிலர் 2' சர்ப்ரைஸ்! | மகத் ராகவேந்திரா, ஐஸ்வர்யா ராஜேஷ் இணைந்து நடிக்கும் புதிய படம்! | இசை பல்கலைக்கழகத்தில் பாடகி மாலதி லக்ஷ்மனுக்கு முக்கிய பொறுப்பு |

தெலுங்கத் திரையுலகத்தில் முன்னணி கதாநாயகிகளில் ஒருவராக இருப்பவர் பூஜா ஹெக்டே. 'முகமூடி' படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் பின்னர் தெலுங்கில் பல ஹிட் படங்களில் நடித்து உயர்ந்தார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு தற்போது விஜய் ஜோடியாக 'பீஸ்ட்' படத்தில் நடித்து வருகிறார்.
தற்போது பூஜாவின் கனவு நிறைவேற ஆரம்பித்துள்ளது. ஆம், ஹிந்தி நடிகர் அமிதாப்பச்சனுடன் நடிக்க வேண்டும் என்ற அவரது கனவு நிறைவேறியுள்ளது.
அமிதாப்புடன் இருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்து, “மனிதர், மேதை, அவருடன் நடிக்க வேண்டும் என்பது கனவு. எனது கனவுப் பட்டியலை 'டிக்' செய்ய ஆரம்பித்துவிட்டேன். மேலும் தகவல்களுக்குக் காத்திருங்கள்,” எனக் குறிப்பிட்டுள்ளார்.
பூஜா ஹெக்டே தற்போது பிரபாஸ் ஜோடியாக 'ராதே ஷ்யாம்' படத்திலும், சிரஞ்சீவி நடிக்கும் 'ஆச்சார்யா' படத்திலும் நடித்து முடித்துள்ளார். ஹிந்தியில் ரன்வீர் சிங் நடிக்கும் 'சர்க்கஸ்' படத்தில் நடித்து வருகிறார்.




