ஹரிஷ் கல்யாண் நடிக்கும் 'தாஷமக்கான்' | மணிரத்னம் படத்தில் நடிக்க மறுத்தாரா சாய் பல்லவி? | நெட்பிளிக்ஸ் முடிவு : அதிர்ச்சியில் தென்னிந்திய திரையுலகம் | விமலின் மகாசேனா படம் டிசம்பர் 12ல் திரைக்கு வருகிறது | பராசக்தி பட டப்பிங்கில் அதர்வா | கோவா சர்வதேச பட விழாவில் அமரன் : சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி | எங்களைப் பொறுத்தவரை உபேந்திரா தெலுங்கின் சூப்பர் ஹீரோ தான் : ராம் பொத்தினேனி | ப்ரோ கோட் டைட்டில் விவகாரம் : நீதிமன்ற விசாரணையில் ரவி மோகனுக்கு சாதகம் | ‛கில்' பட ரீமேக்கில் இருந்து விலகிய துருவ் விக்ரம் | வாட்ச் மீதுள்ள காதல் குறித்து தனுஷ் |

இயக்குனர் ஹரி - அருண் விஜய் கூட்டணியில் முதன்முதலாக உருவாக்கி வரும் படம் 'யானை'. கதாநாயகியாக பிரியா பவானி சங்கர் நடிக்க. பிரகாஷ்ராஜ், ராதிகா, யோகிபாபு உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடிக்கின்றனர் அருண்விஜய்யின் 33வது படமாக இது உருவாகி வருகிறது. ராமேஸ்வரம், காரைக்குடி ஆகிய பகுதிகளில் இதன் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.
இந்தநிலையில் நடிகை ராதிகா இந்தப்படத்தில் தனது காட்சிகளை நடித்து முடித்துவிட்டதாக தெரிவித்துள்ளார்.. கூடவே பிரியா பவானி சங்கர் மற்றும் ஹரியின் மனைவி பிரீத்தா விஜயகுமாருடன் படப்பிடிப்பில் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படங்களையும் சோஷியல் மீடியாவில் வெளியிட்டுள்ளார். பூஜை, சிங்கம்-3 படங்களை தொடர்ந்து ஹரியின் டைரக்சனில் ராதிகா நடித்துள்ள படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.




