புஷ்பா 2, ஸ்த்ரீ 2-க்குப் பிறகு சாதனை வசூலில் 'சாவா' | சூர்யா 46வது படத்தின் பணி துவங்கியது | கன்னட சினிமாவில் அறிமுகமாகும் பூஜா ஹெக்டே | திருமணத்திற்கு பிறகு வாழ்க்கை எப்படி உள்ளது? தொகுப்பாளினி பிரியங்கா சொன்ன பதில் | மூன்று நாட்களில் விஜய்யின் 'சச்சின்' படம் செய்த வசூல் சாதனை! | இந்த வாரம் 'ராமாயணா' படப்பிடிப்பில் கலந்து கொள்ளும் யஷ்! | மஹாராஷ்டிரா கோலாப்பூரில் உள்ள மகாலஷ்மி கோவிலில் சாமி தரிசனம் செய்த சூர்யா - ஜோதிகா! | உங்களை நீங்களே பாராட்டிக் கொள்ளுங்கள்! - ரோஜா பூ உடன் ராஷ்மிகா வெளியிட்ட பதிவு | இரண்டாவது முறையாக ஜோடி சேரும் நிதின், கீர்த்தி சுரேஷ் | ஊர்மிளாவுக்கு 50 வயது மாதிரியா தெரிகிறது… !! |
சென்னை : சட்டத்தை மீறி நடிகர் சூர்யா ரசிகர்கள், ஜெய் பீம் படத்தை அரங்கத்தில் ஒளிபரப்பியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இதுபோல ஆபாச படங்களையும் போட்டால் என்னவாகும் என்று தியேட்டர் சங்க நிர்வாகிகள் கொந்தளித்துள்ளனர்.
நடிகர் சூர்யா தயாரித்து நடித்துள்ள, ஜெய்பீம் படம் நவ., 1ல் ஓ.டி.டி.,யில் வெளியானது. இப்படத்தை, அரசின் திரைப்பட ஒளிப்பதிவு சட்டத்தை மீறி, திருப்பூர் குன்னத்துார் ஊராட்சியில், மினி ரசிகர்கள் காட்சி என அரங்கிற்குள், சூர்யா ரசிகர்கள் திரையிட்டுள்ளனர். இது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே, அவிநாசியில் உள்ள ஓட்டலில் நடக்க இருந்த ரசிகர்கள் காட்சி, புகாரின் அடிப்படையில் தடுத்து நிறுத்தப்பட்டது.
இதுகுறித்து, தமிழ்நாடு தியேட்டர் மற்றும் மல்டிபிளக்ஸ் உரிமையாளர்கள் சங்க மாநில தலைவர் திருப்பூர் சுப்பிரமணியன் கூறியதாவது: உரிமம் பெற்ற தியேட்டர்களில் மட்டுமே, படங்களை வெளியிட வேண்டும். ஆனால், ‛ஜெய் பீம் படத்தை, சூர்யா ரசிகர்கள் ஓட்டல் உள்ளிட்ட பொது வெளியில் திரையிட திட்டமிட்டனர். புகாரின் அடிப்படையில் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. சூர்யா தயாரித்த படத்தை எங்கு வேண்டுமானாலும் வெளியிடட்டும்; அதைப்பற்றி நாங்கள் எதுவும் சொல்லப் போவதில்லை. எங்களை பொறுத்தவரை நான்கு வாரங்களுக்கு பின்னரே படங்களை, ஓ.டி.டி.,க்கு தர வேண்டும். அப்போது தான் தியேட்டரில் படம் ரிலீசாகும்.
கண்டனம் தெரிவிப்பதோ, தடை செய்வதோ எங்கள் வேலை அல்ல. மாறாக இந்த மாதிரி சட்டத்திற்கு புறம்பாக படங்களை வெளியிடக்கூடாது. எங்கு வேண்டுமானாலும் பட்டாசு கடை போட முடியுமா? உங்கள் சவுகரியத்திற்கு படங்களை, கண்ட இடங்களில் போட்டால் எப்படி; இன்று இந்தப்படம் வெளியானால், நாளை செக்ஸ் படங்களையும் இந்த மாதிரி வெளியிடுவர். கடந்த, 35 ஆண்டுகளுக்கு முன் வீடியோ வந்த புதிதில், வீடியோ பார்லர் வைத்துக் கொண்டு படங்களை திரையிட்டனர். அதுபோல, தற்போது படங்களை அரங்கில் வெளியிட நினைக்கின்றனர்.
இவ்வாறு போனால் சினிமா சட்டம் எதற்கு இருக்கிறது. டிவி விளம்பரத்தில், காலையில் சூர்யா, காபி குடிங்கள் என்கிறார்; அவர் தம்பி கார்த்தி, டீ குடிங்கள் என்கிறார். நான் காபி, டீ குடிப்பதில்லை; அதனால் தான், 80 வயதிலும் ஆரோக்கியமாக இருக்கிறேன் என்று, அவர்களின் தந்தை சிவகுமார் கூறுகிறார். இவர்கள் பணத்திற்காக முரண்பாடாக பேசத்தான் செய்வர். எங்களை பொறுத்தவரை, எங்களுக்கான வியாபாரம் எப்போதும் உண்டு; யாரையும் நாங்கள் வற்புறுத்துவதில்லை.
ஒவ்வொரு கால கட்டத்திலும், வெவ்வேறு வகையில் தியேட்டர் தொழிலுக்கு பாதிப்பு வந்தாலும், தியேட்டர் அனுபவம் என்றும் தோற்காது. தியேட்டரை காலத்திற்கு ஏற்ப மேம்படுத்தி வந்தால், நிச்சயம் தியேட்டர் தொழிலை யாரும் முடக்க முடியாது. இவ்வாறு அவர் கூறினார்.
சங்கத்தின் முன்னாள் நிர்வாகி அண்ணாமலை கூறுகையில், தீபாவளி முடிந்ததும் இதுகுறித்து பேச்சு நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும். சூர்யா ரசிகர்களை போல, மற்றவர்களும் ஆரம்பித்து விட்டால், அது தியேட்டர் தொழிலை நிச்சயம் பாதிக்கும், என்றார்.