100 பேர் வந்தாலும்....! பிரதீப் ரங்கநாதனின் 'டியூட்' படத்தின் டிரைலர் வெளியானது! | ஆனந்த்.எல்.ராய் இயக்கத்தில் இணையும் முன்னனி நடிகைகள் | இம்மாதத்தில் ஓடிடியில் வெளியாகும் 'லோகா, இட்லிகடை' | 500 கோடி வசூலை நோக்கி 'காந்தாரா சாப்டர் 1' | அரசன் படத்தின் புதிய அப்டேட் : சுதீப் இணைய வாய்ப்பு | சிவகார்த்திகேயன் உடன் இணையும் ஸ்ரீ லீலா | பைசன் படத்தின் தணிக்கை சான்று மற்றும் ‛ரன்னிங் டைம்' | நான் அசாம், தாய்மொழி நேபாளம் : கயாடு லோகர் புது தகவல் | பாபாஜி குகையில் ரஜினி தியானம், வழிபாடு | இன்பன் உதயநிதி ஹீரோவாகும் படம் : மாரி செல்வராஜ் இயக்குகிறாரா? |
கொரோனா தாக்கம் நிலவிய கடந்த ஒரு வருட காலத்தில் ஒடிடி தளத்தில் வெளியான படங்களை கணக்கிட்டால் அதில் கீர்த்தி சுரேஷ் நடித்த படங்கள் தான் அதிகம் இடம்பிடித்துள்ளது. அதேசமயம் அப்படி வெளியான பெண்குயீன், மிஸ் இந்தியா மற்றும் ரங்தே ஆகிய மூன்று படங்களில் ஒன்றுகூட சோபிக்கவில்லை.. இந்தநிலையில் அவர் தெலுங்கில் நடித்துள்ள குட்லக் சகி படம் வரும் நவ-26ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என தற்போது அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கீர்த்தி சுரேஷுடன் ஆதி பினிஷெட்டி, ஜெகபதிபாபு ஆகியோர் நடித்துள்ள இந்தப்படம் துப்பாக்கி சுடும் வீராங்கனை ஒருவரின் வாழ்க்கை வரலாறாக உருவாகியுள்ளது. இந்தப்படத்தை நாகேஷ் குக்குனூர் இயக்கியுள்ளார். தீபாவளியன்று ரஜினிகாந்துடன், கீர்த்தி சுரேஷ் இணைந்து நடித்துள்ள அண்ணாத்த படமும் வெளியாவதால் இந்த மாதமே அவரது இரண்டு படங்கள் அடுத்தடுத்து ரிலீசாகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.