முதல் நாளில் 39 கோடி வசூலித்த 'கிங்டம்' | ஆலியா பட், ரன்பீர் வசிக்கப் போகும் 250 கோடி புதிய பங்களா | மீண்டும் காதலருடன் வெளிப்படையாக நகர்வலம் வந்த சமந்தா : வைரலாகும் வீடியோ | பரிசு அறிவிப்பதில் நடந்த குளறுபடி : மேடையில் கண்ணீர் விட்டு அழுத நடிகை | இலங்கை சுற்றுப்பயணத்தில் கூட்டத்தில் ஒருவனாக மாறிய மகேஷ்பாபு | எதிர்ப்பு வலுத்ததால் நடிகர் சங்க போட்டியில் இருந்து விலகிய வில்லன் நடிகர் | தலைவன் தலைவி 50 கோடி வசூல் என அறிவிப்பு | யு டியூப் ரிலீஸ் : அமீர்கான் வழியை மற்றவர்கள் பின்பற்றுவார்களா ? | இன்று 7 படங்கள் ரிலீஸ் : முன்பதிவு நிலவரம் என்ன? | தள்ளிப்போகிறது ஜிவி பிரகாஷின் இரண்டு படங்கள்? |
கமல் மற்றும் விஜய் சேதுபதியின் கூட்டணியில் உருவாகி வருகிறது 'விக்ரம்'. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகும் இப்படத்தில் பிரபல மலையாள நடிகர் பகத் பாசிலும் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இவர்களுடன் அர்ஜுன் தாஸ், நரேன், காளிதாஸ் ஜெயராம் ஆகியோரும் இந்த படத்தில் இணைந்துள்ளனர். அனிரூத் இசையமைக்கும் இப்படத்திற்கு க்ரிஷ் கங்காதரன் ஒளிப்பதிவு செய்கிறார்.
இந்நிலையில் நடிகர் கமல்ஹாசன் வரும் 7-ஆம் தேதி பிறந்தநாள் கொண்டாடுகிறார். இதையொட்டி நேற்று விக்ரம் படத்தின் படக்குழுவினரோடு கேக் வெட்டி தனது பிறந்தநாளை கொண்டாடினார். இந்த நிகழ்வில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ், நடிகர் பகத் பாசில், நடன இயக்குனர் சாண்டி, நடிகை காயத்ரி, கிரிஷ் கங்காதரன், ராஜ்கமல் பிலிம்ஸ் நாராயணன், இணை தயாரிப்பாளர் மகேந்திரன் மற்றும் படக்குழுவினர் பங்கேற்றனர்.