ரஜினியின் லிங்கா, கன்னடத்தில் சுதீஷின் முடிஞ்சா இவனை புடி படங்களைத் தொடர்ந்து தெலுங்கில் பாலகிருஷ்ணா நடிப்பில் ஜெய்சிம்மா, ரூலர் ஆகிய படங்களை இயக்கிய கே.எஸ்.ரவிக்குமார், தற்போது சில படங்களில் குணசித்ர வேடங்களில் நடித்து வருகிறார்.
இந்த நிலையில் அடுத்தபடியாக ராகவா லாரன்ஸ் மற்றும் அவரது தம்பி எல்வினை இணைத்து தனது அடுத்த படத்தை இயக்கப் போகிறார். ஆக்ஷன், காமெடி, எமோஷன் நிறைந்த கதையாக இந்தபடம் உருவாகிறது. இதற்கான அறிவிப்பு லாரன்ஸின் பிறந்தநாளான இன்று வெளியாகி உள்ளது. இந்த படத்தில் லாரன்சின் தம்பி எல்வின் ஹீரோவாக நடிக்க, லாரன்ஸ் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். மற்ற நடிகர்கள் தேர்வு நடக்கிறது. விரைவில் படப்பிடிப்பு துவங்க உள்ளது.
இதற்கு முன்பு லாரன்ஸ் நடித்த சில படங்களின் பாடல் காட்சிகளில் எல்வின் நடனமாடியிருக்கிறார். பெயரிடப்படாத இந்த படத்தை டிரைடன்ட் ஆர்ட்ஸ், ஏ.ஆர்.என்டர்டெய்ன்மெண்ட் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன.