ரஜினி வெளியிட்ட ‛வித் லவ்' | 100 மில்லியன் பார்வைகளை கடந்த ‛ஊரும் பிளட்' | கமல், ரஜினி இணையும் படம் : 'மகாராஜா' நித்திலன் இயக்குகிறாரா? | 50 ஆண்டுகளுக்குபின் 150வது நாளை கொண்டாடும் படம் எது தெரியுமா? | சிவகார்த்திகேயன் வளர்ச்சி எப்படி : கீர்த்தி சுரேஷ் சொன்ன பதில் | மாஸ்க் பட ரிசல்ட் நிலவரம் : ஆண்ட்ரியா வீட்டு நிலைமை? | அனைத்து மதங்களின் ரசிகன் நான் : ஏஆர் ரஹ்மான் | பிளாஷ்பேக்: விக்ரம் முதல் காட்சி வசூலை குழந்தைகளுக்கு கொடுத்த கமல் | பிளாஷ்பேக்: 70 ஆண்டுகளுக்கு முன்பே எழுந்த பாடல் சர்ச்சை | ஹீரோவான யு டியூபர் |

சேப்டி ட்ரீம் புரொடக்ஷன், ரூல் பிரேக்கர்ஸ் புரோடக்சன், மேஜிக் லேன்டர்ன் புரோடக்சன் தியா, சினி கிரியேஷன்ஸ் ஆகிய நான்கு நிறுவனங்களின் சார்பில் என்.செந்தில் பிரபு, சக்தி வேல், ஜெகன் நாராயணன், கார்த்திக் அசோக் ஆகியோர் தயாரிக்கும் படம் 4 சாரி.
ஜான் விஜய், காளி வெங்கட், ரித்விகா, சாக்ஷி அகர்வால், பிக் பாஸ் டேனியல், கார்த்திக் அசோகன், சஹானா செட்டி, ஜான் விஜய், முத்துக்குமார், ஆர்.எம்.ஆர். மனோகர் உள்பட பலர் நடித்திருக்கிறார்கள். வெங்கடேஷ் பிரசாத் ஒளிப்பதிவு செய்திருக்கிறார், பிரசன்னா சிவராமன் இசை அமைத்திருக்கிறார். சக்திவேல் இயக்கி உள்ளார். நாளை (அக்டோபர் 29) படம் வெளிவருகிறது.
படம் பற்றி இயக்குனர் சக்திவேல் கூறியதாவது: வல்லக்கோட்டை படத்திற்கு பிறகு நான் இயக்கும் படம் இது. இந்தப் படம் சமுதாயத்தில் வாழும் சாதாரண மனிதர்கள் தங்களின் தவறை உணரும்போது கேட்கும் முதல் வார்த்தையான மன்னிப்பை சார்ந்து உருவாகியிருப்பதால் படத்துக்கு 4 சாரி என பெயரிடப்பட்டுள்ளது. நான்கு சாதாரண மனிதர்களின் வாழ்க்கை இயல்புகளை சுவாரஸ்யமான திரைக்கதையில் சொல்லப்பட்டுள்ளது.
படத்தில் நான்கு தனித்தனி கதைகள் இடம்பெற்றுள்ளது. ஒவ்வொரு மனிதனும் தனது தவறை உணர்ந்து சாரி சொல்லும்போது அவனது வாழ்க்கை எப்படி திசைமாறுகிறது என்பதை சொல்லும் படம். என்றார்.




