ஓடிடியில் இந்த வாரம் ரிலீஸ் என்ன...? : ஒரு பார்வை! | போலீசார் மீதான மரியாதை அதிகரித்துள்ளது : திரிதா சவுத்ரி | இறுதிக்கட்டத்தில் 'கேர்ள் பிரண்ட்' : முதல் பாடல் வெளியீடு | புதுமுகங்களின் 'தி கிளப்' | பிளாஷ் பேக்: தயாரிப்பாளர் ஆன எஸ்.எஸ்.சந்திரன் | பிளாஷ்பேக்: மலையாளத்தின் முதல் சூப்பர் ஸ்டார் | விக்ரம், பிரேம்குமார் கூட்டணி உருவானது எப்படி | ரஜினி, கமல் இணைவார்களா? : காலம் கனியுமா? | காளிதாஸ் 2 வில் போலீசாக நடித்த பவானிஸ்ரீ | 2040ல் நடக்கும் ‛ரெட் பிளவர்' கதை |
எழுத்தாளர் ஜெயமோகன் எழுதி வெளிவந்த 'துணைவன்' சிறுகதையை மையமாக வைத்து உருவாகி வரும் திரைப்படம் 'விடுதலை'. பல வெற்றிப் படங்களை இயக்கிய வெற்றிமாறன் தற்போது சூரியை வைத்து இந்த படத்தை இயக்கி வருகிறார். சூரியுடன் இணைந்து நடிகர் விஜய் சேதுபதியும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
இந்த படத்தில் சூரிக்கு ஜோடியாக பவானி ஸ்ரீ நடித்துள்ளார். இளையராஜா இசையில் இந்தப் படம் உருவாகி வருகிறது. இப்படத்தின் முதற்கட்ட ஷூட்டிங் சத்தியமங்கலம் காடுகளில் கடும் குளிரில் படமாக்கப்பட்டு வந்தது. இதையடுத்து இரண்டாம் கட்ட ஷூட்டிங் செங்கல்பட்டு அருகே நடைபெற்று முடிவடைந்துள்ளது.
இந்த படத்தில் சூரிக்காக தனுஷ் குரல் கொடுத்துள்ளார். படத்தில் இடம்பெறும் பாடல் ஒன்றை தனுஷ் பாடியுள்ளார். இந்த பாடலை இளையராஜா தனுசுக்கு காலை 11 மணி முதல் மதியம் 3 மணி வரை 4 மணி நேரம் சொல்லிக் கொடுத்து பாட வைத்துள்ளார். இதை வெற்றிமாறனே ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.