ஹைதராபாத்தில் அனிருத் நடத்தும் 'கூலி' இசை நிகழ்ச்சி! | ரியல் பிரபாஸூடன் நடித்த நிதி அகர்வால்! | ஜீவாவின் 46வது படத்தை இயக்கும் கே.ஜி.பாலசுப்பிரமணி! | ஆகஸ்ட் 29ல் தனது பிறந்த நாளில் குட் நியூஸ் வெளியிடும் நடிகர் விஷால்! | கமலின் 237வது படத்தில் நடிக்கும் கல்யாணி பிரியதர்ஷன்! | நீண்ட இடைவெளிக்குப் பிறகு திரைக்கு வரும் அதர்வாவின் தணல்! | நாளை ரீரிலீஸ் ஆகும் பாட்ஷா படம்! | இயக்குனர் வேலு பிரபாகரன் காலமானார் | ஓடிடியில் இந்த வாரம் ரிலீஸ் என்ன...? : ஒரு பார்வை! | போலீசார் மீதான மரியாதை அதிகரித்துள்ளது : திரிதா சவுத்ரி |
கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரானா தொற்று காரணமாக பள்ளிகள் மூடப்பட்டு இருந்தன. தற்போது கொரானா தொற்று படிபடியாக குறைந்து வருவதால், பள்ளிகள் அடுத்தடுத்து திறக்கப்பட்டு வருகிறது. ஆனால் கற்றல் இடைவெளி மிகவும் குறைந்துவிட்டதாக பெற்றோரிடமிருந்து பல புகார்கள் அரசுக்கு வந்த வண்ணம் உள்ளன. இந்த புகாரின் அடிப்படையில் துவங்கப்பட்ட திட்டம்தான் 'இல்லம் தேடிக் கல்வி'. இந்த திட்டம் மூலம் ஆசிரியர்கள் வீடு தேடி மாணவர்களுக்கு கல்வி கற்பிக்கவிருக்கிறார்கள்.
இந்த திட்டம் முதல்வர் ஸ்டாலினால் துவங்கப்பட்டுள்ள நிலையில் இது குறித்து விழிப்புணர்வு வீடியோ ஒன்றை நடிகர் சூர்யா வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ பேசியுள்ள அவர், இனிது, இனிது கற்றல் இனிது. இந்த கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நம்ம மாணவர்களோட கற்றல் இடைவெளியை குறைக்க 'இல்லம் தேடிக் கல்வி' என்ற அருமையான திட்டத்தை தமிழக அரசு கொண்டு வந்துள்ளது. நம்ம மாணவ, மாணவிகளுடைய கற்றல் ஆர்வத்தை தூண்டும் விதமாக விளையாட்டு முறையில் எழுதவும், படிக்கவும், கல்வி ஆர்வலர்கள் சொல்லி தரப்போகிறார்கள்.
உரிய பாதுகாப்பு வழிமுறையோடு இல்லம் தேடிக்கல்வி என்ற திட்டத்தில் அனைத்து குழந்தைகளும் பயன்பெற பெற்றோரும், ஊர்மக்களும் ஊக்குவிப்போம். உறுதி செய்வோம். நம்ம குழந்தைகளோட கல்வி மீது ஆர்வமும், அக்கறையும் உள்ளவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து செயல்படவேண்டிய நேரம் இது என்று அந்த விழிப்புணர்வு வீடியோவில் நடிகர் சூர்யா கேட்டுக்கொண்டுள்ளார்.