விக்ரமிற்கு ஜோடியாகும் ருக்மணி வசந்த் | கூலி படத்தில் வலிமையான கதாபாத்திரத்தில் நடிக்கிறேன் : ஸ்ருதிஹாசன் | கீரவாணிவுடன் கம்போசிங் பணியில் ராஜமவுலி | வார் 2 படத்திற்காக மீண்டும் சிக்ஸ்பேக்கிற்கு மாறிய ஜூனியர் என்டிஆர் | கூலி படத்தில் ரஜினிக்காக லோகேஷ் கனகராஜ் செய்த மாற்றம் | தலைவன் தலைவி, மாரீசன் படங்களின் முதல் நாள் வசூல் எவ்வளவு? | மணிகண்டனை இயக்குனர் தியாகராஜன் குமார ராஜா | கருப்பு படத்தை தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய முயற்சி பண்றோம் : ஆர்.ஜே. பாலாஜி | பிரசாந்த் படத்தில் அறிமுகமாகும் பிரபலங்களின் வாரிசுகள் | திருமணம் செய்யாமலேயே கர்ப்பம் ஆன பாவனா |
கொம்பன் படத்துக்கு பிறகு முத்தையாவுடன் கார்த்தி கூட்டணி அமைத்துள்ள படம் விருமன். கிராமத்து பின்னணியில் அமைந்த இந்த படத்தில் இயக்குனர் ஷங்கர் மகள் அதிதி நாயகியாக அறிமுகமாகிறார். தேனி சுற்று வட்டாரப் பகுதியில் இந்தப் படத்தின் படப்பிடிப்பு துவங்கப்பட்டது. தற்போது விருமன் படத்தின் படப்பிடிப்பு மதுரை சுற்று வட்டாரப் பகுதியில் நடைபெற்று வருகிறது. "விருமன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் மதுரைக்கு வந்துள்ளேன். பருத்திவீரன் படத்தைப் பற்றி இங்குள்ள மக்கள் இன்னும் பேசிக் கொண்டிருப்பதை பார்க்கும் போது மகிழ்ச்சியாக உள்ளது. அவர்களின் அரவணைப்பும் அன்பும் மாறாமல் உள்ளது. ஆசீர்வதிக்கப்பட்ட மற்றும் நன்றியுள்ளவர்களாக உணர்கிறேன்!" என்று தெரிவித்துள்ளார்.