எனக்கும் ஒரு எதிர்காலம் உள்ளது... வதந்தி பரப்பாதீங்க : பவித்ரா லட்சுமி | பிரியங்கா மோகனின் துருக்கி கனவு நனவானது | லவ் இன்ஷுரன்ஸ் கம்பெனி - அப்டேட் கொடுத்த விக்னேஷ் சிவன் | கார் பந்தய பயிற்சியின்போது மீண்டும் விபத்தில் சிக்கிய அஜித் | ரீ-ரிலீஸில் சச்சின் படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு | விவாகரத்து நெருங்கிவிட்டது என பதிவு போட்ட ரசிகருக்கு சோனாக்ஷி கொடுத்த பதிலடி | ரயில் ஜன்னல் கம்பி வழியாக மாளவிகா மோகனனிடம் முத்தம் கேட்ட மர்ம நபர் | ரெட்ரோ படத்தின் டிரைலரை உருவாக்கிய அல்போன்ஸ் புத்ரன் | கேரள அரசு விருதை கட்டி அணைத்தபடி தூங்கிய பிரேமலு நடிகர் : வைரலாகும் புகைப்படம் | போதை பொருள் வழக்கு : நடிகர் சைன் டாம் சாக்கோ கைது |
நடிகர் ரஜினிகாந்த்தின் இளைய மகள் சவுந்தர்யா ஹூட் என்ற புதிய செயலியை அறிமுகம் செய்துள்ளார். எழுதப் படிக்க தெரியாதவர்களும் சமூக வலைதளங்கள் மூலம் மற்றவர்களுக்கு தெரிவிக்க வேண்டிய விஷயங்கள், கருத்துக்களை அவர்களின் குரலிலேயே பதிவிட்டு தெரிவிக்கலாம் என்பது இதன் சிறப்பு அம்சம். தமிழ், ஹிந்தி உள்ளிட்ட 15 இந்திய மொழிகளிலும், 10 சர்வதேச மொழிகளில ஹூட் வெளியிடப்பட்டுள்ளது. இந்த தளம் அனைவருக்குமானது என்ற அடிப்படையில் சமஸ்கிருத மொழியும் சேர்க்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் நடந்த இந்த செயலியை ரஜினிகாந்த் டில்லியில் இருந்தபடி தனது குரலை பதிவிட்டு துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் பேசிய சவுந்தர்யா, ‛‛என் அப்பாவுக்கு தமிழ் எழுத வராது. முன்பு அரசியல் கட்சி தொடங்குவது தொடர்பாக அவர் டுவீட் போடுவதற்கு எனக்கு வாய்ஸ் நோட் அனுப்புவார். அப்போது பிறந்த யோசனை தான் இந்த ஹூட் செயலி. என் அப்பாவுக்கு தமிழ் நன்றாக படிக்க தெரியும்; ஆனால் எழுதத் தெரியாது. அப்பாவிடம் கலந்து ஆலோசித்த பிறகு தான் இதை கூறியுள்ளேன். அவருக்கு தமிழ் எழுத தெரியாது என்பதால் அவர் மீது தமிழ்நாடு மக்கள் வைத்துள்ள அன்பு குறையப் போவது இல்லை'' என்றார்.