'ஜனநாயகன்' டிரைலர் : எதிர்பார்ப்புகள் என்ன ? | தமிழில் முதல் வெற்றியைப் பெறுவாரா பூஜா ஹெக்டே ? | இன்று ஒரே நாளில் மூன்று முக்கிய வெளியீடுகள் | சிவகார்த்திகேயனுக்கு கண்டனம் தெரிவித்த சிவாஜி சமூக நலப்பேரவை | பொங்கல் போட்டியில் முக்கிய கதாநாயகிகள் | முன்பதிவில் ஜனநாயகன் செய்த சாதனை | 300வது படத்தை எட்டிய யோகி பாபு | மீண்டும் ரசிகர்களை ஏமாற்றிய கருப்பு | 75 கோடி வசூலை கடந்த சர்வம் மாயா | ஜனநாயகன் ரீமேக் படமா ? பகவத் கேசரி இயக்குனர் பதில் |

தென்னிந்திய சினிமா திரைப்பட விருதுகள் (சைமா) விருது வழங்கும் விழா ஐதராபாத்தில் நடந்தது. இதில் சிறந்த தெலுங்கு படமாக அல வைகுந்தபுரமலு தேர்வானது. சிறந்த நடிகருக்கான விருது அல வைகுந்தபுரமலு படத்தில் நடித்தற்காக அல்லு அர்ஜூனுக்கும், இதே படத்தில் நடித்த பூஜா ஹெக்டேவுக்வும் சிறந்த நடிகைக்கான விருது வழங்கப்பட்டது.
சிறந்த நடிகருக்கான ஜூரி விருது வி படத்தில் நடித்த சுதீந்தர் பாவுக்கும், வோர்ல்ட் பேமஸ் லவ் படத்தில் நடித்த ஐஸ்வர்யா ராஜேசுக்கு சிறந்த நடிகைக்கான ஜூரி விருது கிடைத்தது. சிறந்த இசை அமைப்பாளராக எஸ்.தமன் தேர்வானார். ரத்னவேலுக்கு சிறந்த ஒளிபதிவாளர் விருது கிடைத்தது.
இது தவிர அல வைகுந்தபுரமலு படத்தில் நடித்த முரளி சர்மாவுக்கு சிறந்த துணை நடிகருக்கான விருதும், தபுவுக்கு துணை நடிகைக்கான விருதும், சிறந்த பாடலாசிரியர் விருது ராமஜோகய்யா சாஸ்திரிக்கும், சிறந்த வில்லன் விருது சமுத்திரகனிக்கும் கிடைத்தது.