ஆகஸ்ட் 1ல் 150 படங்களை கடக்கப் போகும் 2025 | 24 மணிநேரத்திற்குள் 50 லட்சம் பார்வைகளை கடந்த ‛என்ன சுகம்' பாடல் | காப்புரிமை விவகாரம் : இளையராஜா மனு தள்ளுபடி | கோவிலில் தீ மிதித்த புகழ் | 'தலைவன் தலைவி' முதல்வார இறுதியில் 25 கோடி வசூல் | அமெரிக்காவில் முன்னதாகவே திரையிடப்படும் 'கூலி' | ஜாய் கிறிஸில்டா பதிவை இதுவரை 'ஷேர்' செய்யாத மாதம்பட்டி ரங்கராஜ் | 30 ஆயிரம் கோடி சொத்துக்களில் பங்கு கேட்கிறாரா கரிஷ்மா கபூர்? | 'கிங்டம்' படத்தில் இலங்கை கதை | சோலோ ஹீரோயினாக நடிக்கும் தன்யா ரவிச்சந்திரன் |
கடந்த 2002-ல் வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற ஜெயம் படத்தின் மூலம் வில்லன் நடிகராக அறிமுகமாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றவர் தான் தெலுங்கு நடிகர் கோபிசந்த். பின்னாளில் ஹீரோவாக புரமோஷன் பெற்ற இவர், அதன்பிறகு வில்லன் கதாபாத்திரங்களை ஏற்று நடிக்கவே இல்லை. தற்போது தமன்னாவுடன் இணைந்து சீட்டிமார் என்கிற படத்தில் நடித்துள்ள .கோபிசந்த்திடம், அந்தப்படத்தின் புரமோஷன் நிகழ்ச்சி ஒன்றில் நீங்கள் மீண்டும் வில்லனாக நடிப்பீர்களா என்கிற கேள்வி கேட்கப்பட்டது.
அதற்கு பதிலளித்த கோபிசந்த், “தொடர்ந்து ஹீரோவாகத்தான் நடிக்க போகிறேன். வில்லனாக நடிக்கும் எண்ணம் கொஞ்சம் கூட இல்லை. அப்படி நடித்து ஹீரோ இமேஜை நானே கெடுத்துக்கொள்ள மாட்டேன். முன்பு வில்லனாக நடித்தது கூட, என்னிடம் இருக்கும் நடிப்புத்திறமையை வெளியே காட்டுவதற்குத்தான்.. ஆனால் என்னுடைய நோக்கம் எப்போதுமே ஹீரோ ஆவதிலேயே இருந்தது” என கூறியுள்ளார்.