ஹரிஷ் கல்யாண் நடிக்கும் 'தாஷமக்கான்' | மணிரத்னம் படத்தில் நடிக்க மறுத்தாரா சாய் பல்லவி? | நெட்பிளிக்ஸ் முடிவு : அதிர்ச்சியில் தென்னிந்திய திரையுலகம் | விமலின் மகாசேனா படம் டிசம்பர் 12ல் திரைக்கு வருகிறது | பராசக்தி பட டப்பிங்கில் அதர்வா | கோவா சர்வதேச பட விழாவில் அமரன் : சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி | எங்களைப் பொறுத்தவரை உபேந்திரா தெலுங்கின் சூப்பர் ஹீரோ தான் : ராம் பொத்தினேனி | ப்ரோ கோட் டைட்டில் விவகாரம் : நீதிமன்ற விசாரணையில் ரவி மோகனுக்கு சாதகம் | ‛கில்' பட ரீமேக்கில் இருந்து விலகிய துருவ் விக்ரம் | வாட்ச் மீதுள்ள காதல் குறித்து தனுஷ் |

பிரித்விராஜ் நடிப்பில் பிரபல இயக்குனர் ஆசிக் அபு இயக்கத்தில் 'வாரியம் குன்னன் என்கிற படம் துவங்கப்பட இருப்பதாக கடந்த வருடம் ஜூன் மாதம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஒன்று வெளியானது. 1921ல் ஆங்கிலேயர் ஆட்சிகாலத்தில் நடந்த மலபார் புரட்சியின் பின்னணியாக வைத்து இந்தப்படம் உருவாக இருந்தது. இந்தப்படத்தில் ஆங்கிலேயரை தீவிரமாக எதிர்த்து போராடிய 'சக்கிப்பரம்பன் வாரியம்குன்னத்து. குஞ்சஹம்மது ஹாஜி' என்கிற மாவீரனின் கதாபாத்திரத்தில் தான் பிரித்விராஜ் நடிக்க இருந்தார்.
அந்த மாவீரனின் நூற்றாண்டை கொண்டாடும் விதமாக 2021ல் இந்தப்படத்தின் படப்பிடிப்பை துவங்க இருந்தார்கள்.. ஆனால் தற்போது இந்தப்படத்தில் இருந்து நடிகர் பிரித்விராஜ் மட்டுமல்ல, இயக்குனர் ஆசிக் அபுவும் சேர்ந்து விலகியுள்ளார்களாம்.. தயாரிப்பாளர் தரப்பு சொன்னபடி இந்தப்படத்தை தயாரிக்க ஆர்வம் காட்டவில்லை எனவும், இந்தப்படம் அறிவிக்கப்பட்ட நாளில் இருந்து பல திசைகளில் இருந்து எழுந்த பிரச்சனைகளை பற்றி அவர்கள் கண்டுகொள்ளவே இல்லை என்றும் காரணம் சொல்லப்படுகிறது..
அதனால் தான் பிரித்விராஜும் ஆசிக் அபுவும் இந்தப்படத்தில் இருந்து விலகியுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்தப்படம் அறிவிக்கப்பட்ட சமயத்தில் இப்ராஹீம் வெங்கரா, அலி அக்பர் மற்றும் பி.டி.குஞ்சு முஹம்மது என்கிற மூன்று பேர் தாங்களும் இதே வாரியம்குன்னன் கதையை படமாக்கும் முயற்சியில் இருப்பதாக போட்டியாக அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தினார்கள் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.




