இந்த முட்டாள் யார் : ஸ்ரேயா கோபம் | பெண் குழந்தைக்கு அப்பாவான பிரேம்ஜி அமரன் | டிச., 8ல் துவங்கும் சூர்யா 47 பட படப்பிடிப்பு | தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் கடும் போட்டி | ஏகனுக்கு ஜோடியாக இரண்டு நாயகிகள் | நலமாக இருந்தால்தான் நல்லதைத் தர முடியும்: தீபிகா படுகோனே | ஒரு வாரம் தள்ளிப்போகும் ‛வா வாத்தியார்' | தனுஷ், அவரது மேலாளர் பற்றிய சர்ச்சை : முற்றுப்புள்ளி வைத்த மான்யா ஆனந்த் | 9 படங்களில் நடிக்கும் நயன்தாரா : இந்தியாவிலே இவர்தான் டாப் | ரீ ரிலீஸ் படங்கள் முடிவுக்கு வருகிறதா? |

கொரோனா இரண்டாவது அலையின் தீவிரம் ஓரளவு குறைந்து திரையுலகிற்கான கட்டுப்பாடுகளும் படிப்படியாக தளர்த்தப்பட்டு வருகின்றன. அந்தவகையில் அடுத்தடுத்து படங்கள் ரிலீசுக்கு தயாராகி வருகின்றன. இதில் தமன்னா நடித்துள்ள எப்-3, மேஸ்ட்ரோ, மற்றும் சீட்டிமார் என மூன்று படங்கள் உடனடியாக அடுத்தடுத்து தியேட்டர், ஒடிடி என இரண்டு தளங்களிலும் ரிலீசாக இருக்கின்றன.
இதில் மேஸ்ட்ரோ படத்தை தான் தமன்னா ரொம்பவே எதிர்பார்க்கிறாராம் தமன்னா.. காரணம் இந்தப்படம் இந்தியில் வெளியாகி வெற்றிபெற்ற அந்தாதுன் படத்தின் தெலுங்கு ரீமேக்காக உருவாகியுள்ளது. அதில் தபுவுக்கு பெயர் வாங்கி கொடுத்த அந்த கதாபாத்திரத்தில் தான் தமன்னா நடித்துள்ளார். இந்தபடம் வெளியானால் அதற்கடுத்து நாயகியை முன்னிலைப்படுத்திய படங்கள் தன்னைத்தேடி வர வாய்ப்பு உருவாகும் என்பதால் இந்தப்படத்திற்காக கொரோனா ஆபர் என சம்பளத்தில் பெரிய அளவில் குறைத்துக் கொண்டு நடித்துள்ளாராம் தமன்னா.