ரஜினி, கமல் கூட்டணி படம் : பிரதீப் ரங்கநாதன் பதில் | விஜய் ஆண்டனியின் அடுத்தபடம் பற்றிய தகவல் | நாகர்ஜூனாவின் 100வது படம் தொடங்கியது | பான் இந்தியா படம் : பிரசாந்த் ஆர்வம் | நான் அவனில்லை : இயக்குனர் பாரதி கண்ணன் விளக்கம் | 'காந்தாரா சாப்டர்1' காஸ்ட்யூம் டிசைன்: ரிஷப் ஷெட்டி மனைவி பிரகதி நெகிழ்ச்சி | 300 கோடி வசூல் படங்கள் : லாபக் கணக்கு எவ்வளவு ? | அடுத்த மல்டிபிளக்ஸ் திறக்கப் போகும் மகேஷ்பாபு | 50 கோடி வசூல் கடந்த 'இட்லி கடை' | என் அணிக்கு தமிழக அரசு ஸ்பான்சரா: அஜித் விளக்கம் |
கடந்த வருடம் கொரோனா தாக்கம் உருவாவதற்கு முன்பாகவே வேணு உடுகுலா என்பவர் இயக்கத்தில் பீரியட் படமாக தயாராகி விட்டது 'விராட பர்வம்'.. இந்தப்படத்தில் போலீஸ் அதிகாரியாக ராணா நடிக்க, நக்ஸலைட் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் சாய்பல்லவி. மேலும் சீனியர்களான பிரியாமணி, நந்திதா தாஸ், ஈஸ்வரி ராவ் ஆகியோரும் நடித்துள்ள இந்தப்படத்திற்கு, கொரோனா இரண்டாவது அலை தீவிரமடைவதற்கு முன்னதாக ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டிருந்தது.
அதன்பின் ஊரடங்கு அமலுக்கு வந்ததால், படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிப்போனது. இந்தப்படத்திற்கு இருக்கும் எதிர்பார்ப்பு காரணமாக ஒடிடி தரப்பில் நல்ல விலை தருவதற்கு நிறுவனங்கள் பேச்சு வார்த்தை நடத்தி வருவதாகவும், அதனால் இந்தப்படம் கூடிய விரைவில் ஒடிடியில் வெளியாகலாம் என்றும் ஒரு செய்தி கடந்த நாட்களாக சோஷியல் மீடியாவில் பேசப்பட்டு வருகிறது.
இந்தநிலையில் படத்தின் இயக்குனர் வேணு உடுகுலா, விராட பர்வம்' படம் ஒடிடியில் ரிலீஸாக வாய்ப்பில்லை. நிலைமை ஓரளவு சீரானதும், நிச்சயம் தியேட்டர்களில் தான் வெளியாகும் என உறுதியாக கூறியுள்ளார்.