நான் அவனில்லை : இயக்குனர் பாரதி கண்ணன் விளக்கம் | 'காந்தாரா சாப்டர்1' காஸ்ட்யூம் டிசைன்: ரிஷப் ஷெட்டி மனைவி பிரகதி நெகிழ்ச்சி | 300 கோடி வசூல் படங்கள் : லாபக் கணக்கு எவ்வளவு ? | அடுத்த மல்டிபிளக்ஸ் திறக்கப் போகும் மகேஷ்பாபு | 50 கோடி வசூல் கடந்த 'இட்லி கடை' | என் அணிக்கு தமிழக அரசு ஸ்பான்சரா: அஜித் விளக்கம் | பிளாஷ்பேக்: சினிமாவுக்கு பாட்டு எழுதிய காளிமுத்து | பிளாஷ்பேக்: நாகேஸ்வர ராவின் தம்பியாக நடித்த நம்பியார் | 3 மணி நேரம் 40 நிமிடம் ஓடப் போகும் 'பாகுபலி தி எபிக்' | 3 ஹீரோக்கள் இணையும் படம் |
தெலுங்குத் திரையுலகின் சீனியர் ஹீரோவான சிரஞ்சீவி தற்போது 'ஆச்சார்யா' படத்தில் நடித்து வருகிறார். இப்படத்திற்கான படப்பிடிப்பு 15 நாட்கள் மட்டுமே மீதமிருந்த நிலையில் கொரானோ தொற்று காரணமாக படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. மீண்டும் எப்போது படப்பிடிப்பு ஆரம்பமாகும் என்று தெரியவில்லை.
இப்படத்தின் படப்பிடிப்பை முடிக்காமல் வேறு எந்தப் படத்திலும் நடிக்க சிரஞ்சீவி விரும்பவில்லையாம். அதனால், அவர் நடிக்க வேண்டிய அனைத்துப் படங்களையும் தள்ளி வைத்துவிட்டார் என்கிறார்கள்.
மலையாளத்தில் வெளிவந்த 'லூசிபர்' படத்தை தெலுங்கில் ரீமேக் செய்ய பூஜையும் நடந்தது. சிரஞ்சீவி நடிக்கும் அப்படத்தை மோகன்ராஜா இயக்கவிருந்தார். அடுத்து தமிழில் அஜித் நடித்து வெளிவந்த 'வேதாளம்' படத்தையும் ரீமேக் செய்ய இருந்தார். அவற்றோடு ஒரு நேரடி தெலுங்குப் படத்திலும் நடிக்க முடிவு செய்திருந்தார். இந்த மூன்று படங்களையும் தள்ளி வைத்துவிட்டாராம்.
தற்போதுள்ள நிலையில் 'ஆச்சார்யா' படப்பிடிப்பை மீண்டும் நடத்தி அப்படத்தை வெளியிட ஆகஸ்ட் மாதம் ஆகலாம். அதற்குப் பிறகே நடிக்க வேண்டிய மற்ற மூன்று படங்களைப் பற்றி திட்டமிட உள்ளார்களாம்.