மதராஸி ‛கம்பேக்' கொடுக்கும் படமாக இருக்கும் என்கிறார் ஏ.ஆர்.முருகதாஸ் | 'ஏஸ்' தோல்வியிலிருந்து ஏறி வந்த விஜய் சேதுபதி | ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்த மாதம்பட்டி ரங்கராஜ் இரண்டாவது திருமணம் | வாடகை வீட்டில் வசிப்பது ஏன் ? பாலிவுட் நடிகர் அனுபம் கெர் ஆச்சரிய விளக்கம் | அஜித்தை வைத்து ஆக்ஷன் படம் இயக்க லோகேஷ் கனகராஜ் ஆசை | ராஷ்மிகாவின் மைசா படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது | பிளாஷ்பேக் : வரிசை கட்டிவந்த யுத்த பிரச்சாரத் திரைப்படங்கள் | அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் நடிப்பதை உறுதி செய்த லோகேஷ் கனகராஜ் | வெற்றிமாறன், சிம்பு படத்தின் புதிய அப்டேட் | ஆகஸ்ட் 1ல் பல படங்கள் போட்டி.. |
சில வருடங்களுக்கு முன்பு மலையாளத்தில் இயக்குனர் ரோஷன் ஆண்ட்ரூஸ், பிரித்விராஜை வைத்து இயக்கிய 'மும்பை போலீஸ்' என்கிற படம் சூப்பர் ஹிட்டானது. வழக்கமான போலீஸ் திரைப்படங்களிலிருந்து மாறுபட்டு த்ரில்லர் படமாக உருவான இந்த படம் கிளைமாக்ஸ் டுவிஸ்ட்டுக்காகவும், படத்தில் கையாளப்பட்ட வித்தியாசமான ஒரு விஷயத்திற்காகவும் மிகவும் பரபரப்பாக பேசப்பட்டது. இந்தநிலையில் அந்த படம் வெளியாகி நேற்றோடு எட்டு வருடங்களை கடந்து உள்ளது
இதுகுறித்து தனது மகிழ்ச்சியை தெரிவித்துள்ள இயக்குனர் ரோஷன் ஆண்ட்ரூஸ், மேலும் இந்த படம் விரைவில் ரீ-மேக் செய்யப்பட இருக்கிறது என்றும் அறிவித்துள்ளார். தொடர்ந்து பல வருடங்களாகவே இந்த படத்தை நீங்கள் ஏன் ரீமேக் செய்யக்கூடாது என, தன்னிடம் பலர் கேட்டு வந்ததாகவும், தற்போது அதற்கு உரிய நேரம் வந்து விட்டதாகவும் கூறியுள்ளார் ரோஷன் ஆண்ட்ரூஸ். தற்போது துல்கர் சல்மான் நடிப்பில் சல்யூட் என்கிற படத்தை இயக்கி வரும் ரோஷன் ஆண்ட்ரூஸ், அதை முடித்துவிட்டு இந்தப்படத்தை இயக்குவார் என தெரிகிறது.
ஆனால் இந்த படம் எந்த மொழியில் ரீமேக் செய்யப்பட இருக்கிறது என்பது பற்றியெல்லாம் எந்த தகவலும் அவர் கொடுக்கவில்லை. அதேசமயம் எந்த மொழிக்கும் பொருந்தும் கதைக்களம் என்பதாலும், ஏற்கனவே ரோஷன் ஆண்ட்ரூஸ் தமிழில் 36 வயதினிலே என்கிற படத்தை இயக்கி இருப்பதாலும் இந்த படம் தமிழில் ரீமேக்காவதற்கே வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக தெரிகிறது