நிஜத்திலும், சினிமாவிலும் அம்மா ஆன மந்திரா | அஜித்தின் 65வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | கூலி படத்தில் பஹத் பாசிலுக்கு உருவாக்கப்பட்ட வேடத்தில் சவுபின் ஷாகிர் | எந்த கூட்டணி அமையும்? யாராச்சும் உறுதிப்படுத்துங்கப்பா | சூப்பர் குட் பிலிம்ஸ் 100வது படத்தில் நடிப்பது யார்? | 'தண்டட்டி' இயக்குனர் படத்தில் கவின் | அந்த மொட்டை யார் தெரியுமா? : கல்யாணி பகிர்ந்த சுவாரசிய போட்டோ | ஆவேசம் பட இயக்குனரின் கதையில் புதிய படம் இயக்கும் மஞ்சும்மேல் பாய்ஸ் இயக்குனர் | மோகன்லாலின் ‛ஹிருதயபூர்வம்' ரிலீஸ் தேதி அறிவிப்பு | மோகன்லால் நடித்த கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் வடிவேலு |
சினிமாவில் நுழைந்து பத்து ஆண்டுகளை கடந்துவிட்ட நடிகர் துல்கர் சல்மான் தற்போது தான் முதன் முறையாக 'சல்யூட் என்கிற படத்தில் போலீஸ் வேடத்தில் நடிக்கிறார். தமிழில் 36 வயதினிலே படத்தை இயக்கிய இயக்குனர் ரோஷன் ஆண்ட்ரூஸ் தான் இந்தப்படத்தை இயக்குகிறார். அதுமட்டுமல்ல ஏற்கனவே மும்பை போலீஸ் என்கிற சூப்பர்ஹிட் போலீஸ் படத்தையும் இயக்கியவர்.
கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கிய படப்பிடிப்பை ஒரேக்கட்டமாக நடத்தி முடித்துள்ளார் ரோஷன் ஆண்ட்ரூஸ். கதாநாயகியாக பாலிவுட்டை சேர்ந்த டயானா பென்ட்டி என்பவர் நடித்திருக்கிறார்.
இந்தப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது பற்றி துல்கர் சல்மான் கூறும்போது, “சல்யூட் முடிந்தது. அரவிந்த் கருணாகரனுக்கு (படத்தில் துல்கரின் பெயர்) ஒரு சல்யூட்டுடன் பிரியாவிடை கொடுக்கிறேன்..இந்த வாய்ப்பை கொடுத்ததற்காக ரோஷன் இயக்குனர் ஆன்ட்ரூஸுக்கு நன்றி. மேலும் இந்தப்படத்தை தயாரிக்கும் வாய்ப்பும் எனக்கே கிடைத்ததில் இன்னும் மகிழ்ச்சி” என கூறியுள்ளார்.