இசையமைப்பாளர் இளையராஜா அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் | பூஜா ஹெக்டேவின் பிறந்த நாளில் 'ஜனநாயகன்' படக்குழு வெளியிட்ட போஸ்டர்! | 'டியூட்' படத்திற்காக இரவு முழுக்க தூங்காமல் பயிற்சி எடுத்த மமிதா பைஜு! | அல்லு அர்ஜுனை தொடர்ந்து 'கேஜிஎப்' நாயகன் யஷை இயக்கும் அட்லி! | ரஜினியின் அடுத்த படத்தை தயாரிப்பது யார்? | இப்படியெல்லாம் ஐடியா கொடுப்பது யாரு? | 2025 தீபாவளி : 3 இளம் ஹீரோக்களின் போட்டி | சல்மான் கான் கமெண்ட்டுக்கு பதிலளிப்பாரா ஏஆர் முருகதாஸ் ? | காதலரைக் கரம் பிடிக்க 15 வருடங்கள் காத்திருந்த கீர்த்தி சுரேஷ் | தமிழ் இயக்குனர்களைக் கவர்ந்த நாகார்ஜுனா 'ஹேர்ஸ்டைல்' |
ஜம்மு காஷ்மீர், பஹல்காமில் நடந்த தாக்குதலுக்கு பதிலடியாக ‛ஆபரேஷன் சிந்தூர்' என்ற பெயரில் இந்தியா நடவடிக்கை எடுத்தது. பாகிஸ்தானின் ஒன்பது தீவிரவாத முகாம்களையும், நூற்றுக்கணக்கான தீவிரவாதிகளையும் இந்திய ராணுவம் அழித்தது. பாகிஸ்தானுக்கும் தக்க பதிலடி கொடுத்தது. இதற்கு ஒட்டுமொத்த நாடே இந்திய ராணுவத்துக்கு பாராட்டு தெரிவித்தனர். இந்த நிலையில் நடிகர் கமல்ஹாசன் தனது சமூக வலைத்தளத்தில் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அதில், துப்பாக்கிகள் அமைதியாகும்போது இந்த நிமிடத்தை நாம் பயன்படுத்தி நம்மில் மற்றவர்களின் அமைதியை காண உயரிய தியாகம் செய்தவர்களை நாம் நினைவு கூற வேண்டும். நம்முடைய வீரம் மிகுந்த ராணுவத்தை வணங்குகிறேன். தேசிய கொடியை பார்த்தபடி கடமையினால் நிரம்பிய இதயத்துடன் ஆபத்தின் முன்பும் தடுமாற்றம் இல்லாமல் நிற்கும் வீரர்கள் உங்களது விழிப்பும் தைரியமும் எல்லைகளை பாதுகாக்கிறது.
ஜம்மு காஷ்மீர், ஹரியானா, பஞ்சாப், ராஜஸ்தான், குஜராத் மாநில மக்களுக்கு உங்கள் பொறுமையும், மனப்பாங்கும் சாதாரணமானதல்ல. நீங்கள் உயர்ந்து இருந்தீர்கள். உங்களது துணையோடு இந்திய நாடு பெருமையாக நின்றது. சோதனையான நேரத்தில் இந்தியாவின் ஒற்றுமையை மிகப்பெரிய சக்தியாக கண்டோம். பல மாநிலங்கள் பல மொழிகள் கருத்துக்கள் அனைத்திலும் ஒன்று சேர்ந்துதான் அது பலமாக மாறியது. இந்த விஷயத்தில் இந்திய அரசின் உறுதியான பதிலை பாராட்டுகிறேன்.
உலகிற்கு ஒரு தெளிவான செய்தியை அனுப்பியது இந்தியா. பயங்கரவாதத்திற்கு முன்பு ஒரு நாளும் வளைந்து கொடுக்காது என்பதை நிரூபித்து விட்டார்கள். இந்தியா வலிமையான, சிந்திக்கும் நாடு. இது வெற்றியை கொண்டாட கூடிய காலம் அல்ல. சிந்திக்க வேண்டிய நேரம். வலிமையான இந்தியாவுக்காக மறுபடியும் பலப்படுத்தி கட்டி எழுப்ப வேண்டிய நேரம். ஜெய்ஹிந்த்!!
இவ்வாறு கமல் தெரிவித்திருக்கிறார்.