ஒரே வன்முறை, ரத்தம் தெறிக்கும் காட்சிகள் : ரஜினியின் 'கூலி' படத்திற்கு ‛ஏ' சான்று | பிரதீப் ரங்கநாதன் பாணியில் அபிஷன் ஜீவிந்த் நாளை மறுநாள் ஹீரோ ஆகிறார் | பிட்னஸ் ரகசியத்தை வெளியிட்ட சமந்தா | ஜெயிலர் 2 படப்பிடிப்பு : மீண்டும் கேரளா செல்லும் ரஜினி | 3 விருதுகளை வென்ற ‛பார்க்கிங்' : ஷாரூக்கான், ராணி முகர்ஜி, ஜிவி பிரகாஷிற்கு தேசிய விருது | ஒரே நாளில் இரண்டு இலங்கைத் தமிழ் ஹீரோக்களின் படங்கள் ரிலீஸ் | அமெரிக்காவில் ஜேசுதாஸை சந்தித்த ஏஆர் ரஹ்மான் | டிரண்டாகும் மதராஸி படத்தின் சலம்பல பாடல் | கூலியால் தள்ளிப்போன எல்ஐகே பட அறிவிப்பு | மோகன்லால் பட இயக்குனரின் படத்தில் நடிக்கும் கார்த்தி |
நாகார்ஜுனா தற்போது தெலுங்கில் நடித்துள்ள 'வைல்டு டாக்' என்கிற படம் இன்று(ஏப்., 2) வெளியாகியுள்ளது. அறிமுக இயக்குனரான சாலமன் என்பவர் இந்த படத்தை இயக்கியுள்ளார். அண்டர் கவர் ஆபரேஷனை மையப்படுத்தி உருவாகியுள்ள இந்த படத்தில் நாகார்ஜூனா ஏசிபி விஜய் வர்மா என்கிற ஒரு ரப் அன்ட் டப் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். இத்தனை வருடங்கள் சினி பீல்டில் இருந்தாலும் இப்போதும் அவருக்கு முதல் படம் ரிலீசாவது போலவே பதட்டம் ஏற்பட்டு விடுகிறதாம்.
இந்த நிலையில் நேற்று மாலை நடிகர் சிரஞ்சீவியின் அழைப்பை ஏற்று அவரது வீட்டிற்கு சென்றுள்ளார் நாகார்ஜுனா.. அவருக்கு விதவிதமான உணவு வகைகளை தன் கையாலேயே சமைத்து சாப்பிட வைத்த சிரஞ்சீவி, கலகலப்பாக பேசி நாகார்ஜுனாவின் டென்சனை போக்கி, அவரை கூல் பண்ணி அனுப்பி வைத்துள்ளார். சிரஞ்சீவிக்கு நன்றி தெரிவித்து, அவர் மனைவி சுரேகா தங்கள் இருவரையும் இணைத்து எடுத்த புகைப்படம் ஒன்றையும் தனது சோஷியல் மீடியா பக்கத்தில் வெளியிட்டுள்ளார் நாகார்ஜுனா.